17 ஆதாயத்துக்காக அவன் அநியாயமும் பாவமும் செய்ததைப் பார்த்துக் கொதித்துப்போனேன்.+
அதனால் அவனைத் தாக்கினேன்; கோபத்தில் என் முகத்தை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.
அவனோ மனம் போன போக்கில் போய்+ எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தான்.
18 அவன் போகிற போக்கையெல்லாம் பார்த்தேன்.
ஆனாலும் அவனைக் குணப்படுத்துவேன்,+ வழிநடத்துவேன்.+
அவனுக்கும் அவனோடு சேர்ந்து துக்கப்படுகிறவர்களுக்கும்+ ஆறுதல் அளிப்பேன்.”+