30பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+
3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+