உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+

  • 2 நாளாகமம் 36:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 வாளுக்குத் தப்பியவர்களை பாபிலோனுக்குப் பிடித்துக்கொண்டு போனான்.+ பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி ஆரம்பமாகும்வரை+ அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் அவர்கள் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.+ 21 இப்படி, எரேமியா மூலம் யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.+ அந்தத் தேசம் கடைப்பிடிக்காமல் விட்டுவிட்ட ஓய்வுநாட்களுக்கு ஈடாக,+ 70 வருஷங்களுக்கு அது பாழாய்க் கிடந்தது.+

  • எஸ்றா 1:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த முதலாம் வருஷத்திலே, எரேமியா மூலம் சொன்னதை+ நிறைவேற்றுவதற்காக கோரேசின் மனதை யெகோவா தூண்டினார். யெகோவாவின் தூண்டுதலால், கோரேஸ் தன்னுடைய சாம்ராஜ்யம் முழுவதும் ஓர் அறிவிப்பு செய்து, அதை எழுதியும் வைத்தார்.+ அதில்,

      2 “பெர்சிய ராஜா கோரேஸ் அறிவிப்பது என்னவென்றால், ‘பரலோகத்தின் கடவுளாகிய யெகோவா இந்த உலகத்தில் இருக்கிற எல்லா தேசங்களையும் என் கையில் கொடுத்திருக்கிறார்.+ யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார்.+ 3 அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ அவர்களெல்லாம் யூதாவிலுள்ள எருசலேமுக்குப் போய், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும். அவர்களுடைய கடவுள் அவர்களோடு இருப்பாராக. அவர்தான் உண்மைக் கடவுள்; அவருடைய ஆலயம் எருசலேமில் இருந்தது.*

  • எஸ்றா 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 மாகாணத்தை* சேர்ந்த அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனுக்குப்+ பிடித்துக்கொண்டு போயிருந்தான்.+ அவர்கள் அங்கிருந்து எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்து அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+

  • எரேமியா 24:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அவர்களுக்கு நல்லது செய்வதிலேயே கண்ணாக இருப்பேன். அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+ அவர்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்த்துப் போட மாட்டேன். அவர்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கி எறிய மாட்டேன்.+

  • தானியேல் 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 தானியேலாகிய நான் புத்தகங்களை* படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, எருசலேம் 70 வருஷங்களுக்குப் பாழாய்க் கிடக்கும்+ என்று எரேமியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொல்லியிருந்ததைப் புரிந்துகொண்டேன்.+

  • சகரியா 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 உடனே யெகோவாவின் தூதர், “பரலோகப் படைகளின் யெகோவாவே, எருசலேமின் மேலும் யூதா நகரங்களின் மேலும் இந்த 70 வருஷங்களாக நீங்கள் பயங்கர கோபத்தோடு இருந்தீர்கள்.+ இனியும் எத்தனை நாளைக்குத்தான் இரக்கம் காட்டாமல் இருப்பீர்கள்?”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்