-
2 நாளாகமம் 36:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+
-
-
எரேமியா 52:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 ஐந்தாம் மாதம் பத்தாம் தேதியில், அதாவது பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஆட்சி செய்த 19-ஆம் வருஷத்தில், நேபுசராதான் எருசலேமுக்குள் வந்தான்.+ இவன் காவலாளிகளின் தலைவன், பாபிலோன் ராஜாவின் சேவகன். 13 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும் எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும் அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பெரிய மனிதர்களுடைய வீடுகளைக்கூட ஒன்றுவிடாமல் எரித்துப்போட்டான்.
-