7 நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை அடியோடு அழிப்பேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன்.+ அப்போது, மற்ற தேசத்து மக்கள் எல்லாரும் இஸ்ரவேல் மக்களை ஏளனமாகப் பேசுவார்கள், கேலியும் கிண்டலும் செய்வார்கள்.+
9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+10 காவலாளிகளின் தலைவனோடு இருந்த கல்தேய வீரர்கள் எல்லாரும் சேர்ந்து எருசலேமைச் சுற்றியிருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.+