உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்த ஆலயம் மண்மேடாகும்.+ இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்; ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’ என்று கிண்டலாக* கேட்பார்கள்.+

  • சங்கீதம் 79:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 79 கடவுளே, மற்ற தேசத்தார் உங்கள் தேசத்துக்குள் படையெடுத்து வந்தார்கள்.+

      உங்களுடைய பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.+

      எருசலேமை மண்மேடாக ஆக்கினார்கள்.+

  • ஏசாயா 64:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகிய

      பரிசுத்தமும் மகிமையுமான* ஆலயம்

      இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+

      நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது.

  • எரேமியா 7:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன்.

  • புலம்பல் 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அவளுடைய எல்லா பொக்கிஷங்களின் மேலும் எதிரி கை வைத்துவிட்டான்.+

      எந்த ஜனங்கள் உங்கள் சபைக்குள் வரக் கூடாது என்று கட்டளை கொடுத்தீர்களோ

      அந்த ஜனங்களே அவளுடைய ஆலயத்துக்குள் வருவதை அவள் பார்த்தாள்!+

  • புலம்பல் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவா தன்னுடைய பலிபீடத்தை ஒதுக்கித்தள்ளினார்.

      தன்னுடைய ஆலயத்தை நிராகரித்தார்.+

      சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+

      பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+

  • மீகா 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.

      எருசலேம் மண்மேடாகும்.+

      ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+

      உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்