உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு, உண்மைக் கடவுள்முன் நிற்பதற்காக மோசே அந்த மலைமேல்+ ஏறிப்போனார். மலையிலிருந்து யெகோவா அவரைக் கூப்பிட்டு, “நீ யாக்கோபின் வம்சத்தாராகிய இஸ்ரவேலர்களிடம் போய் என் செய்தியைச் சொல். அவர்களிடம்,

  • யாத்திராகமம் 19:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நீங்கள் என் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்து என் ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால், மற்ற எல்லா ஜனங்களிலும் நீங்கள் எனக்கு விசேஷ சொத்தாக+ இருப்பீர்கள். ஏனென்றால், இந்த முழு பூமியும் எனக்குத்தான் சொந்தம்.+

  • யாத்திராகமம் 24:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்பின், ஒப்பந்தப் புத்தகத்தை* எடுத்து அதை ஜனங்களுக்கு முன்னால் சத்தமாகப் படித்தார்.+ அப்போது அவர்கள், “யெகோவா சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம், அவருடைய பேச்சைக் கேட்டு நடப்போம்”+ என்றார்கள்.

  • எரேமியா 31:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 ஆனால், அவர்களுடைய முன்னோர்களை நான் எகிப்திலிருந்து கைப்பிடித்து நடத்திக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தைப் போல அது இருக்காது.+ ‘நான் அவர்களுடைய உண்மையான எஜமானாக* இருந்தும் அந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீறினார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”

  • எரேமியா 34:18-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கன்றுக்குட்டியை இரண்டாக வெட்டி, அதன் நடுவே நடந்துபோய், என்முன் ஒப்பந்தம் செய்துவிட்டு,+ பின்பு அதை மீறிய 19 யூதாவின் அதிகாரிகள், எருசலேமின் அதிகாரிகள், அரண்மனை அதிகாரிகள், குருமார்கள், ஜனங்கள் ஆகிய எல்லாருக்கும் வரப்போகிற கதி இதுதான்: 20 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகளின் கையில் நான் அவர்களைக் கொடுத்துவிடுவேன். வானத்திலுள்ள பறவைகளும் பூமியிலுள்ள மிருகங்களும் அவர்களுடைய பிணங்களைத் தின்றுதீர்க்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்