-
எரேமியா 19:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 எருசலேம் ஜனங்களுடைய வீடுகளும் யூதாவின் ராஜாக்களுடைய அரண்மனைகளும் இந்த தோப்பேத்தைப்+ போலவே அசுத்தமாகும். ஏனென்றால், அவற்றின் மொட்டைமாடிகளில் அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் பலி செலுத்துகிறார்கள்.+ பொய் தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்’”+ என்று சொன்னார்.
-
-
எரேமியா 44:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்களும் உங்கள் மனைவிகளும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டீர்கள். “நாங்கள் நேர்ந்துகொண்டபடி விண்ணரசிக்குத் திராட்சமது காணிக்கையையும் மற்ற காணிக்கைகளையும் செலுத்தியே தீருவோம்”+ என்று சொன்னீர்கள். பெண்களே, உங்களுடைய நேர்த்திக்கடனைக் கண்டிப்பாகச் செலுத்தத்தான் போகிறீர்கள்!’
-