5 யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+ 6 இரண்டு செம்பு விலங்குகள் போட்டு அவரை பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காக+ பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார்+ படையெடுத்து வந்தான்.