உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 28:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+

  • உபாகமம் 29:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தும் அவர்கள் அவற்றை வணங்கினார்கள்.+ 27 அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவந்தார்.+

  • யோசுவா 23:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+ 16 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த ஒப்பந்தத்தை மீறி மற்ற தெய்வங்களைக் கும்பிட்டால், யெகோவாவுக்கு உங்கள்மேல் பயங்கர கோபம் வரும்.+ அவர் தந்திருக்கிற இந்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாக அழிந்துபோவீர்கள்”+ என்று சொன்னார்.

  • 2 ராஜாக்கள் 23:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதனால் யெகோவா, “இஸ்ரவேலை என் கண் முன்னாலிருந்து நீக்கியதுபோல்+ யூதாவையும் நீக்கிவிடுவேன்;+ நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தை ஒதுக்கித்தள்ளுவேன்; ‘என் பெயர் இங்கே நிலைத்துநிற்கும்’+ என்று எந்த ஆலயத்தைப் பற்றி சொன்னேனோ அந்த ஆலயத்தையும் நிராகரிப்பேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்