உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 14:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதற்கு நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! தீர்க்கதரிசிகள் இந்த ஜனங்களிடம், ‘நீங்கள் வாளால் கொல்லப்படவும் மாட்டீர்கள், பஞ்சத்தால் சாகவும் மாட்டீர்கள். கடவுள் உங்களை இந்தத் தேசத்திலேயே நிம்மதியாக வாழ வைப்பார்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே” என்றேன்.

  • எரேமியா 23:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “அந்தத் தீர்க்கதரிசிகள் உங்களுக்குச் சொல்லும் தீர்க்கதரிசனங்களைக் கேட்காதீர்கள்.+

      அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.*

      யெகோவாவின் செய்தியைச் சொல்லாமல்+

      சொந்தமாகக் கதை கட்டுகிறார்கள்.+

      17 என்னை மதிக்காதவர்களிடம்,

      ‘“நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

      தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே போகிறவர்களிடம்,

      ‘உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது’+ என்று சொல்கிறார்கள்.

  • எரேமியா 27:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ‘நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்’+ என்று சொல்கிற தீர்க்கதரிசிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+

  • எரேமியா 28:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதே வருஷத்தில், அதாவது சிதேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷம் ஐந்தாம் மாதத்தில், கிபியோனைச்+ சேர்ந்த ஆசூரின் மகனாகிய அனனியா தீர்க்கதரிசி யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தான். அங்கே குருமார்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் என்னிடம் இப்படிச் சொன்னான்: 2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை நான் உடைத்துப்போடுவேன்.+

  • புலம்பல் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+

      அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+

      பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்