உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிற ஜனங்களை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே!+ நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று சொன்னீர்களே,+ ஆனால் நாங்கள் வாளுக்குப் பலியாகப்போகிறோமே” என்றேன்.

  • எரேமியா 5:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+

      குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.

      என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+

      ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”

  • எரேமியா 6:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+

      தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+

      14 சமாதானமே இல்லாதபோது,

      ‘சமாதானம் இருக்கிறது! சமாதானம் இருக்கிறது!’+ என்று சொல்லி,

      என் ஜனங்களுடைய காயங்களை* மேலோட்டமாகக் குணப்படுத்தப் பார்க்கிறார்கள்.

  • எரேமியா 23:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “அந்தத் தீர்க்கதரிசிகள் உங்களுக்குச் சொல்லும் தீர்க்கதரிசனங்களைக் கேட்காதீர்கள்.+

      அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள்.*

      யெகோவாவின் செய்தியைச் சொல்லாமல்+

      சொந்தமாகக் கதை கட்டுகிறார்கள்.+

      17 என்னை மதிக்காதவர்களிடம்,

      ‘“நீங்கள் நிம்மதியாக வாழ்வீர்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்’ எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.

      தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே போகிறவர்களிடம்,

      ‘உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது’+ என்று சொல்கிறார்கள்.

  • எரேமியா 27:8-10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியின்கீழ் வந்து அவனுக்கு அடிபணிய மறுக்கிற தேசத்தை அல்லது ராஜ்யத்தை நான் அவனுடைய கையாலேயே அடியோடு அழிக்கும்வரை அதை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.’

      9 ‘அதனால், தீர்க்கதரிசிகளும் குறிசொல்கிறவர்களும் கனவு காண்கிறவர்களும் மந்திரவாதிகளும் சூனியக்காரர்களும் உங்களிடம், “நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்ய மாட்டீர்கள்” என்று சொல்வதை நம்பாதீர்கள். 10 அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனங்களைச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் நீங்கள் எல்லாரும் தூர தேசத்துக்குக் கொண்டுபோகப்படுவீர்கள். நான் உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன். நீங்கள் அழிந்துபோவீர்கள்.

  • எசேக்கியேல் 13:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சமாதானம் இல்லாதபோதும் “சமாதானம் இருக்கிறது” என்று சொல்லி என் ஜனங்களை அவர்கள் ஏமாற்றியதால்தான் அவர்களுக்கு இந்தக் கதி ஏற்படும்.+ அவர்கள் உறுதியில்லாத தடுப்புச்சுவரைக் கட்டி, அதற்கு மேற்பூச்சாக வெள்ளையடிக்கிறார்கள்.’*+

  • மீகா 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+

      அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+

      அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+

      ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள்.

      “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+

      எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்