12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+
விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.
13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+
உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.
அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.
ஏனென்றால், அவர் கரிசனையும் இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+