உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் ஊழியர்களான ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்துப் பாருங்கள். அவர்களிடம், ‘உங்கள் சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பெருகப் பண்ணுவேன்,+ நான் தேர்ந்தெடுத்த இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததிக்கு நிரந்தர சொத்தாகத் தருவேன்’+ என்று உங்கள்மேல் சத்தியம் செய்து கொடுத்தீர்களே” என்றார்.

  • லேவியராகமம் 26:41, 42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 அவர்கள் எனக்குத் துரோகம் செய்ததால் நானும் அவர்களுக்கு விரோதமாக நடவடிக்கை எடுத்தேன்.+ எதிரிகளின் தேசத்துக்கு அவர்களைக் கொண்டுபோனேன்.+

      அவர்கள் ஒருவேளை தங்களுடைய இதயத்திலுள்ள பிடிவாத குணத்தை விட்டுவிட்டுத்+ தங்களுடைய குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துதான் அப்படிக் கொண்டுபோனேன். 42 யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன்.

  • சங்கீதம் 106:43-45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+

      ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+

      குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+

      44 ஆனால், அவர்கள் பட்ட வேதனையைக் கடவுள் பார்த்தார்.+

      உதவிக்காக அவர்கள் கதறியதை அவர் கேட்டார்.+

      45 அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.

      அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு* வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்