உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 24:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யூதாவின் ராஜாவான யோயாக்கீன் தன்னுடைய அம்மாவையும் ஊழியர்களையும் உயர் அதிகாரிகளையும்* அரண்மனை அதிகாரிகளையும்+ கூட்டிக்கொண்டு பாபிலோன் ராஜாவிடம் போனார்.+ பாபிலோன் ராஜா தான் ஆட்சி செய்த எட்டாம் வருஷத்தில் அவரைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 ராஜாக்கள் 24:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இப்படி, யோயாக்கீனையும்+ அவருடைய அம்மாவையும் மனைவிகளையும் அரண்மனை அதிகாரிகளையும் பிரபலமான ஆண்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+

  • 2 நாளாகமம் 36:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யோயாக்கீன்+ ராஜாவானபோது அவருக்கு 18 வயது. அவர் எருசலேமில் மூன்று மாதங்கள், பத்து நாட்கள் ஆட்சி செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களையே அவர் செய்துவந்தார்.+ 10 வருஷத்தின்* ஆரம்பத்தில், யோயாக்கீனையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும்+ பாபிலோனுக்குக் கொண்டுபோவதற்காகப் படைவீரர்களை நேபுகாத்நேச்சார் அனுப்பினான்.+ யோயாக்கீனுக்குப் பதிலாக, அவருடைய சித்தப்பாவான சிதேக்கியாவை யூதாவுக்கும் எருசலேமுக்கும் ராஜாவாக்கினான்.+

  • எரேமியா 24:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்,*+ யூதாவின் அதிகாரிகளையும், கைத்தொழிலாளிகளையும், கொல்லர்களையும்* எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு+ போன பின்பு யெகோவா எனக்கு ஒரு காட்சியைக் காட்டினார். இரண்டு அத்திப் பழக் கூடைகள் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தன.

  • எரேமியா 29:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போயிருந்த பெரியோர்களுக்கும்* குருமார்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் எரேமியா தீர்க்கதரிசி எருசலேமிலிருந்து ஒரு கடிதம் எழுதினார். 2 எகொனியா ராஜாவும்,+ அவருடைய தாயும்,*+ அரண்மனை அதிகாரிகளும், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்களும், கைத்தொழிலாளிகளும், கொல்லர்களும்* சிறைபிடிக்கப்பட்டுப் போன பின்பு+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்