உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 28:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 குருமார்களும் தீர்க்கதரிசிகளும்கூட மதுபானத்தினால் வழிதவறிப் போகிறார்கள்.

      திராட்சமது குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள்.

      தவறான வழியில் போகிறார்கள்.

      திராட்சமது அவர்களைக் குழம்பிப்போகச் செய்கிறது.

      மதுபானம் அவர்களைத் தள்ளாட வைக்கிறது.

      அவர்கள் பார்க்கும் தரிசனம் அவர்களை வழிதவறிப் போகவைக்கிறது.

      தீர்ப்பு வழங்குவதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.+

  • எரேமியா 5:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 தீர்க்கதரிசிகள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+

      குருமார்கள் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.

      என் ஜனங்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது.+

      ஆனால், முடிவு வரும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”

  • எரேமியா 6:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாருமே அநியாயமாக லாபம் சம்பாதிக்கிறார்கள்.+

      தீர்க்கதரிசிகள்முதல் குருமார்கள்வரை எல்லாருமே மோசடி செய்கிறார்கள்.+

  • எசேக்கியேல் 22:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 உன்னுடைய தீர்க்கதரிசிகள் சதி செய்கிறார்கள்.+ இரையைக் கடித்துக் குதறுகிற கர்ஜிக்கும் சிங்கங்களைப் போல இருக்கிறார்கள்.+ அவர்கள் ஜனங்களைக் கொன்றுபோடுகிறார்கள். சொத்துகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் பிடுங்கிக்கொள்கிறார்கள். நிறைய பெண்களை விதவைகளாக ஆக்குகிறார்கள்.

  • செப்பனியா 3:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 உன் தீர்க்கதரிசிகள் திமிர் பிடித்தவர்கள், துரோகிகள்.+

      உன் குருமார்கள் பரிசுத்தமானதைக் கெடுப்பவர்கள்;+

      சட்டத்தை மீறுகிறவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்