உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 22:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு குருவாகிய இல்க்கியா, சாப்பானின் மகன் அகிக்காம்,+ மிகாயாவின் மகன் அக்போர், செயலாளர் சாப்பான், ராஜாவின் ஊழியர் அசாயா ஆகியோரிடம் ராஜா பேசினார். 13 “நீங்கள் போய் எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா மக்கள் எல்லாருக்காகவும் யெகோவாவிடம் விசாரியுங்கள். இப்போது கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றி அவரிடம் கேளுங்கள். நாம் பின்பற்ற வேண்டிய கட்டளைகளெல்லாம் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், நம் முன்னோர்கள் அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்கவில்லை, அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவாவின் கடும் கோபம் நம்மீது பற்றியெரிகிறது”+ என்று சொன்னார்.

  • எரேமியா 39:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான், நேபுசஸ்பான் என்ற ரப்சாரிஸ்,* நெர்கல்-சரேத்சேர் என்ற ரப்மாக்* ஆகியவர்களும் பாபிலோன் ராஜாவுடைய முக்கிய அதிகாரிகளும் ஆட்களை அனுப்பி, 14 எரேமியாவை ‘காவலர் முற்றத்திலிருந்து’+ வெளியே கொண்டுவந்தார்கள். பின்பு, அவரை சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ ஒப்படைத்து, அவருடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார்கள். அதன்பின், எரேமியா ஜனங்கள் மத்தியில் வாழ்ந்துவந்தார்.

  • எரேமியா 40:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எரேமியா போகாமல் தயங்கிக்கொண்டே இருந்தபோது காவலாளிகளின் தலைவனாகிய நேபுசராதான் அவரிடம், “நீ சாப்பானின்+ மகனாகிய அகிக்காமின்+ மகன் கெதலியாவிடம்+ போய், அவரோடு இருக்கிற ஜனங்களுடன் தங்கு. ஏனென்றால், அவரை யூதாவின் நகரங்களுக்கு அதிகாரியாக பாபிலோன் ராஜா நியமித்திருக்கிறார். அங்கே போக விருப்பம் இல்லையென்றால் நீ வேறு எங்கு வேண்டுமானாலும் போகலாம்” என்று சொன்னான்.

      பின்பு, அவருக்கு உணவும் அன்பளிப்பும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்