44 அதன் பின்பும், எதிரிகளின் தேசத்தில் நான் அவர்களை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளவோ, அடியோடு அழிக்கவோ மாட்டேன்.+ அப்படிச் செய்தால் அவர்களோடு செய்த ஒப்பந்தத்தை நான் மீறுவதாக இருக்கும்.+ நான் அவர்களுடைய கடவுளாகிய யெகோவா.
31 அப்போதும்கூட மிகுந்த இரக்கம் காட்டி, அவர்களை அழிக்காமல் விட்டீர்கள்.+ நீங்கள் கரிசனையும்* இரக்கமும் உள்ள கடவுள்+ என்பதால் அவர்களைக் கைவிடாமல் காப்பாற்றினீர்கள்.