உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 26:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அதனால், உங்களுடைய மகன்களின் சதையையும் மகள்களின் சதையையும் நீங்கள் தின்பீர்கள்.+

  • உபாகமம் 28:54-57
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 54 இளகிய மனதுள்ளவனும் சொகுசாக வாழ்ந்தவனும்கூட தன் மகன்களுடைய சதையைத் தின்னும்போது, அண்ணன் தம்பிக்கோ ஆசை மனைவிக்கோ உயிரோடு இருக்கிற மகன்களுக்கோ அதைக் கொடுக்க மாட்டான். அவர்களுக்கு இரக்கம் காட்ட மாட்டான். 55 ஏனென்றால், சாப்பிட அவனிடம் வேறு எதுவும் இருக்காது. எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.+ 56 இளகிய மனதுள்ளவளும் கால் தரையில் படாத அளவுக்கு சொகுசாக வாழ்ந்தவளும்கூட,+ ஆசை கணவனுக்கோ மகனுக்கோ மகளுக்கோ இரக்கம் காட்ட மாட்டாள். 57 தான் பெற்றெடுக்கிற பிள்ளையையும் பிரசவத்தின்போது வெளியேறுகிற எதையும் அவர்களுக்குக் கொடுக்க மாட்டாள். அவள் மட்டும் ரகசியமாகத் தின்றுதீர்ப்பாள். ஏனென்றால், எதிரிகள் உங்கள் நகரங்களைச் சுற்றிவளைத்து, உங்களை அந்தளவுக்கு வாட்டி வதைப்பார்கள்.

  • புலம்பல் 2:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவாவே, உங்களிடம் கடுமையான தண்டனை பெற்றவளைப் பாருங்கள்.

      பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளையே சாப்பிட வேண்டுமா?+

      குருமார்களும் தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் ஆலயத்தில் கொல்லப்பட வேண்டுமா?+

  • புலம்பல் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 நரிகள்கூட குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்.

      ஆனால், என் மகளாக இருக்கும் மக்கள் வனாந்தரத்திலுள்ள நெருப்புக்கோழிகள்+ போலக் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்