-
எசேக்கியேல் 10:9-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, கேருபீன்களுக்குப் பக்கத்தில் நான்கு சக்கரங்கள் தெரிந்தன. ஒவ்வொரு கேருபீனுக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரங்கள் படிகப்பச்சைக் கல் போல ஜொலித்தன.+ 10 நான்கு சக்கரங்களும் பார்ப்பதற்கு ஒரேபோல் இருந்தன. அவை ஒவ்வொன்றும், ஒரு சக்கரத்துக்குள் இன்னொரு சக்கரத்தை வைத்தது போல இருந்தன. 11 அவை திரும்பாமலேயே எல்லா திசைகளிலும் போயின. கேருபீன்களுடைய முகத்தின்* திசையிலேயே அவை திரும்பாமல் போயின. 12 கேருபீன்களுடைய உடல் முழுவதும், அவர்களுடைய முதுகுகளும், கைகளும், சிறகுகளும், சக்கரங்களும் கண்களால் நிறைந்திருந்தன. அந்த நான்கு பேருடைய சக்கரங்களுமே சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.+ 13 அந்தச் சக்கரங்களிடம் ஒரு குரல், “சக்கரங்களே!” என்று கூப்பிடுவதைக் கேட்டேன்.
-