5 யெகோவா சொல்வது இதுதான்:
“யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டு
அற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+
நம்புகிறவன் சபிக்கப்படுவான்.
6 பாலைவனத்தில் நிற்கிற தனி மரம் போல அவன் ஆவான்.
அவன் நல்லதை அனுபவிக்க மாட்டான்.
வனாந்தரத்தின் வறண்ட பகுதிகளிலும்,
யாருமே குடியிருக்க முடியாத உப்புநிலத்திலும்தான்
அவன் குடியிருப்பான்.