-
யாத்திராகமம் 32:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அப்போது, மோசே தன் கடவுளாகிய யெகோவாவிடம் இப்படிக் கெஞ்சினார்:+ “யெகோவாவே, இந்த ஜனங்களை மகா வல்லமையோடும் கைபலத்தோடும் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தவர் நீங்கள்தானே? அப்படியிருக்கும்போது, இவர்கள்மேல் நீங்கள் இந்தளவுக்குக் கோபப்படலாமா?+ 12 எகிப்தியர்கள் உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவதற்கு ஏன் இடம் தர வேண்டும்? அவர்கள், ‘இஸ்ரவேலர்களை மலையில் கொன்றுபோட்டு இந்தப் பூமியிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுதான் அவர்களுடைய கடவுள் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்’ என்று சொல்வார்களே.+ அதனால் உங்களுடைய கடும் கோபத்தை விட்டுவிடுங்கள். தயவுசெய்து, இந்த ஜனங்களை அழிக்க வேண்டுமென்ற உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.
-
-
யோசுவா 2:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+ 10 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது உங்கள் முன்னால் செங்கடலை யெகோவா வற்றிப்போகச் செய்ததையும்,+ எமோரியர்களின் இரண்டு ராஜாக்களான சீகோனையும்+ ஓகையும்+ யோர்தானின் கிழக்கே நீங்கள் அழித்துப்போட்டதையும் கேள்விப்பட்டோம்.
-
-
1 சாமுவேல் 4:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 “இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் கடவுள் வந்துவிட்டார்!” என்று சொல்லி பெலிஸ்தியர்கள் பயந்து நடுங்கினார்கள்.+ அதனால், “ஐயோ, ஆபத்து! இதுபோல் ஒருபோதும் நடந்ததில்லை! 8 ஐயோ, ஆபத்து வந்துவிட்டது! மகத்தான இந்தத் தெய்வத்திடமிருந்து யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்? வனாந்தரத்தில் எகிப்தியர்களைக் கொன்று குவித்தது இந்தத் தெய்வம்தான்!+
-