-
1 ராஜாக்கள் 5:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அவற்றை என்னுடைய ஆட்கள் லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். அவற்றை ஒன்றாகக் கட்டி நீங்கள் சொல்கிற இடத்துக்குக் கடல்வழியாக அனுப்பி வைக்கிறேன். அவை வந்துசேர்ந்ததும் என்னுடைய ஆட்கள் அவற்றை அவிழ்த்துக் கொடுப்பார்கள். அதன் பின்பு, நீங்கள் எடுத்துக்கொண்டு போகலாம். இதற்காக, என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொடுங்கள்”+ என்று சொன்னார்.
-
-
எஸ்றா 3:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களுக்கும்+ கைத்தொழிலாளிகளுக்கும்+ அவர்கள் பணம் கொடுத்தார்கள். அதோடு, சீதோனையும் தீருவையும் சேர்ந்த ஜனங்களுக்கு உணவையும் பானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் பெர்சிய ராஜா கோரேசின் உத்தரவுப்படி+ தேவதாரு மரங்களை லீபனோனிலிருந்து யோப்பாவுக்குக் கடல் வழியாகக் கொண்டுவந்திருந்தார்கள்.+
-
-
அப்போஸ்தலர் 12:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 தீரு மற்றும் சீதோன் மக்கள்மேல் அவன் பயங்கர கோபமாக இருந்தான்.* அதனால், அந்த மக்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அவனிடம் வந்தார்கள். முதலில் ராஜாவின் அந்தரங்க அதிகாரியான பிலாஸ்துவிடம் பக்குவமாகப் பேசி, ராஜாவோடு சமாதானமாவதற்கு முயற்சி செய்தார்கள். ஏனென்றால், ஏரோதுவின் தேசத்திலிருந்துதான் அவர்களுடைய தேசத்துக்கு உணவுப் பொருள்கள் வந்தன.
-