10 உங்களுடைய பரிசுத்தமான நகரங்கள் வனாந்தரம்போல் ஆகிவிட்டன.
சீயோன் வெறும் வனாந்தரத்தைப் போலவும்,
எருசலேம் பொட்டல் காடு போலவும் ஆகிவிட்டது.+
11 எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகிய
பரிசுத்தமும் மகிமையுமான ஆலயம்
இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+
நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது.