-
ஏசாயா 26:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
கடவுளுடைய கோபம் தீரும்வரை
கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.+
-
-
மத்தேயு 24:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 ஏனென்றால், அப்போது மிகுந்த உபத்திரவம்+ உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை.+ 22 சொல்லப்போனால், அந்த நாட்கள் குறைக்கப்படவில்லை என்றால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக அந்த நாட்கள் குறைக்கப்படும்.+
-
-
வெளிப்படுத்துதல் 7:13, 14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அப்போது, மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை உடைகள் போட்டிருக்கிற+ இவர்கள் யார், எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டார். 14 உடனடியாக நான், “எஜமானே, அது உங்களுக்குத்தான் தெரியும்” என்று சொன்னேன். அப்போது அவர், “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து+ தப்பித்தவர்கள். தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியவர்கள்.+
-