29 அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+ 30 பிற்காலத்தில் நீங்கள் இந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து மனவேதனையில் துடிக்கும்போது உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புவீர்கள், அவர் சொல்வதைக் கேட்பீர்கள்.+