-
உபாகமம் 30:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
30 பின்பு அவர், “நான் உங்கள் முன்னால் வைத்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் நிறைவேறும்போது,+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சிதறிப்போக வைக்கும் தேசங்களில்+ அவற்றை நினைத்துப் பார்த்து,+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஒருவேளை நீங்கள் திரும்பி வரலாம்.+ ஒருவேளை நீங்களும் உங்கள் மகன்களும் இன்று நான் கொடுக்கிற எல்லா கட்டளைகளையும் கேட்டு, முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால்,+ 3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+
-
-
உபாகமம் 30:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அப்போது, நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்து அவருடைய பேச்சைக் கேட்பீர்கள். இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடிப்பீர்கள். 9 நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.+ உங்களுக்கு ஏராளமான பிள்ளைகளையும் மந்தைகளையும் விளைச்சலையும் தருவார். யெகோவா உங்கள் முன்னோர்களை ஆசீர்வதிப்பதில் சந்தோஷப்பட்டது போலவே உங்களை ஆசீர்வதிப்பதிலும் சந்தோஷப்படுவார்.+ 10 அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு, இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிப்பீர்கள். முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்பி வருவீர்கள்.+
-
-
1 ராஜாக்கள் 8:48, 49பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
48 தங்களைப் பிடித்துக்கொண்டு போன எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் உங்களிடம் திரும்பி வந்தால்,+ முன்னோர்களுக்கு நீங்கள் கொடுத்த தேசத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்த நகரத்தையும் உங்கள் பெயருக்காக நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி ஜெபம் செய்தால்,+ 49 அவர்கள் செய்கிற ஜெபத்தையும் கருணை காட்டச் சொல்லி உங்களிடம் செய்கிற மன்றாட்டையும் நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ கேட்டு அவர்களுக்கு நீதி வழங்குங்கள்.
-