21 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை கும்பிட்டு என் கோபத்தைக் கிளறினார்கள்.+
வீணான சிலைகளை வணங்கி என்னை நோகடித்தார்கள்.+
அதனால், ஒன்றுக்கும் உதவாத ஜனத்தைக்கொண்டு நானும் அவர்களுடைய கோபத்தைக் கிளறுவேன்.+
முட்டாள்தனமான தேசத்தைக்கொண்டு நானும் அவர்களை நோகடிப்பேன்.+
22 என் கோபத் தீ பற்றியெரிகிறது.+
அது கல்லறையின் அடிமட்டத்தையும் சுட்டெரிக்கும்.+
பூமியையும் அதன் விளைச்சலையும் பொசுக்கும்.
மலைகளின் அஸ்திவாரங்களையே கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.