உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 15:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அப்போது, அசீரியாவின் ராஜாவான பூல்+ இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். அவனுக்கு 1,000 தாலந்து* வெள்ளியைக் கொடுத்து அவனுடைய உதவியுடன் மெனாகேம் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.+

  • எசேக்கியேல் 23:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.

      5 அகோலாள் என்னுடையவளாக இருந்தபோது விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள்.+ அவளுடைய ஆசைக் காதலர்களான அசீரியர்களை+ மோகத்தோடு தேடிப்போனாள்.+

  • ஓசியா 5:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.

      யூதா தன் புண்ணைப் பார்த்தான்.

      எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.

      அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை.

      புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை.

  • ஓசியா 12:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 “எப்பிராயீம் காற்றை நம்புகிறான்.

      கிழக்கிலிருந்து அடிக்கும் காற்றைப் பிடிக்க நாள் முழுக்க ஓடுகிறான்.

      அவனுடைய பொய்யும் வன்முறையும் பெருகிவிட்டன.

      அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்,+ எகிப்துக்கு எண்ணெயைக் கொண்டுபோகிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்