-
எசேக்கியேல் 23:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 பெரியவளின் பெயர் அகோலாள்.* சின்னவளின் பெயர் அகோலிபாள்.* அவர்கள் என்னுடையவர்களாக இருந்தார்கள். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தார்கள். அகோலாள் என்பவள்தான் சமாரியா,+ அகோலிபாள் என்பவள்தான் எருசலேம்.
5 அகோலாள் என்னுடையவளாக இருந்தபோது விபச்சாரம் செய்ய ஆரம்பித்தாள்.+ அவளுடைய ஆசைக் காதலர்களான அசீரியர்களை+ மோகத்தோடு தேடிப்போனாள்.+
-
-
ஓசியா 3:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பின்பு யெகோவா என்னிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற தெய்வங்களை வணங்கி,+ உலர்ந்த திராட்சை அடைகளை* விரும்புகிறார்கள். ஆனாலும், யெகோவாவாகிய நான் அவர்கள்மேல் அன்பு காட்டுகிறேன்.+ அதைப் போல நீயும், உனக்குத் துரோகம் செய்து இன்னொருவனின் ஆசைநாயகியாக மாறிவிட்ட பெண்ணை மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அவளிடம் அன்பு காட்டு”+ என்றார்.
-