உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 30:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ராஜாவும் அதிகாரிகளும் கொடுத்த கடிதங்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் முழுவதும் யூதா முழுவதும் தூதுவர்கள் போனார்கள். ராஜா கட்டளையிட்டபடி மக்களிடம் போய், “இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வாருங்கள். அப்போதுதான், அசீரிய ராஜாக்களின்+ கையிலிருந்து தப்பித்து மீதியாயிருக்கும் உங்களிடம் அவர் திரும்பி வருவார்.

  • ஏசாயா 55:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 வாய்ப்பு இருக்கும்போதே யெகோவாவைத் தேடுங்கள்.+

      அவர் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும்போதே அவரைக் கூப்பிடுங்கள்.+

       7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

  • ஓசியா 12:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 “அதனால் உங்கள் கடவுளிடம் திரும்புங்கள்.+

      விசுவாசமாக இருங்கள்,* நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்.+

      எப்போதும் உங்கள் கடவுளை நம்புங்கள்.

  • யோவேல் 2:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+

      விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.

      13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+

      உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.

      அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*

      ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்