-
லேவியராகமம் 26:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ 6 தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன்.+ நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள்.+ தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள்.
-
-
மீகா 4:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பலதரப்பட்ட ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.+
தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.
அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.
ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+
ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.
போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+
-