4 ஏழைகளை மிதிப்பவர்களே,
தாழ்மையானவர்களை அழிப்பவர்களே,+
5 நீங்கள், ‘மாதப் பிறப்பு பண்டிகை எப்போது முடியும்?+ பயிர்களை விற்க வேண்டுமே,
ஓய்வுநாள்+ எப்போது முடியும்? தானியங்களை விற்பனை செய்ய வேண்டுமே,
அளவைக் குறைத்து, விலையை ஏற்றிவிடலாம்,
கள்ளத் தராசை வைத்து ஏமாற்றலாம்,+
6 வெள்ளியைக் கொடுத்து எளியவனை வாங்கலாம்,
ஒரு ஜோடி செருப்பைக் கொடுத்து ஏழையை வாங்கலாம்,+
மட்டமான தானியங்களை ஜனங்கள் தலையில் கட்டலாம்’ என்றெல்லாம் திட்டமிடுகிறீர்கள்.
இப்போது இதைக் கொஞ்சம் கேளுங்கள்.