4 இஸ்ரவேல் ஜனங்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.
தேசத்து ஜனங்களோடு யெகோவா வழக்காடப் போகிறார்.+
ஜனங்கள் மத்தியில் நேர்மையும் இல்லை, விசுவாசமும் இல்லை,+ கடவுளைப் பற்றிய அறிவும் இல்லை.
2 அவர்கள் பொய் சத்தியம் செய்கிறார்கள், உண்மையைப் புரட்டுகிறார்கள்,+ உயிர்களைப் பறிக்கிறார்கள்,+
திருடுகிறார்கள், மணத்துணைக்குத் துரோகம் செய்கிறார்கள்,+
கொலைக்குமேல் கொலை செய்கிறார்கள்.+