உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அவர் என் மீட்பரானார்;+ ‘யா’வே* என் பலம், என் கோட்டை.

      அவர்தான் என்னுடைய கடவுள், நான் அவரைப் புகழ்வேன்.+

      அவர் என்னுடைய தகப்பனின் கடவுள்,+ நான் அவரைப் போற்றுவேன்.+

  • 1 சாமுவேல் 2:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 பின்பு அன்னாள் கடவுளிடம்,

      “யெகோவாவே, என் நெஞ்சம் சந்தோஷத்தில் துள்ளுகிறது.+

      யெகோவாவே, நீங்கள் எனக்குப் பலம் தருகிறீர்கள்.*

      என் எதிரிகளுக்கு நான் இனி பதிலடி கொடுப்பேன்.

      நீங்கள் தரும் மீட்பினால் எனக்குள் சந்தோஷம் பொங்குகிறது.

  • சங்கீதம் 18:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர்.+

      என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+

      அவர்தான் என் கேடயம், பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்.+

  • சங்கீதம் 27:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார்.

      யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+

      யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+

      யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?

  • ஏசாயா 61:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 நான் யெகோவாவை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவேன்.

      என் கடவுளை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போவேன்.+

      ஏனென்றால், மீட்பின் உடையை அவர் எனக்குத் தந்திருக்கிறார்.+

      நீதியின் சால்வையை எனக்குப் போர்த்தியிருக்கிறார்.

      தலைப்பாகை அணியும்*+ மணமகனைப் போலவும்,

      நகைகள் அணியும் மணமகளைப் போலவும் அவர் என்னை அலங்கரித்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்