உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 ஆனாலும், யூதா மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த கடும் கோபம் தணியவே இல்லை. ஏனென்றால், கடவுள் அருவருக்கிற காரியங்களைச் செய்து மனாசே அவரைப் புண்படுத்தியிருந்தார்.+

  • 2 நாளாகமம் 36:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+

      17 எனவே, கல்தேயர்களின் ராஜாவை அவர்களுக்கு விரோதமாக அனுப்பினார்.+ அவர்களுடைய ஆலயத்திலேயே+ இளைஞர்களை அவன் வாளால் வெட்டிக் கொன்றான்.+ இளைஞர்கள் என்றோ கன்னிப்பெண்கள் என்றோ பார்க்கவில்லை, வயதானவர்கள் என்றோ பலவீனமானவர்கள் என்றோ பரிதாபப்படவில்லை.+ சொல்லப்போனால், எல்லாவற்றையும் கடவுள் அவர்கள் கையில் கொடுத்துவிட்டார்.+

  • எரேமியா 23:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 நினைத்ததைச் செய்து முடிக்கும்வரை

      யெகோவாவின் கோபம் தணியாது.

      கடைசி நாட்களில் இதை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள்.

  • புலம்பல் 4:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவின் கோபம் தீ போலப் பற்றியெரிந்தது.

      அவர் தன்னுடைய கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.+

      சீயோனில் நெருப்பு மூட்டினார்; அது அவளுடைய அஸ்திவாரங்களைப் பொசுக்கியது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்