-
ஆமோஸ் 1:13-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவா சொல்வது இதுதான்:
‘“அம்மோனியர்கள் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
அவர்களுடைய நாட்டின் எல்லையை விரிவாக்குவதற்காக+ கீலேயாத்தில் இருக்கிற கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்தார்கள்.
14 அதனால், ரப்பாவின் மதிலுக்குத் தீ வைக்கப்போகிறேன்.+
அது அவளுடைய கோட்டைகளைச் சாம்பலாக்கிவிடும்.
அந்த நாளில் போர் முழக்கம் கேட்கும்.
அந்த நாளில் சூறாவளி வீசும்.
15 அவர்களுடைய ராஜாவும் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
-
-
யூதா 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதேபோல், சோதோம் கொமோராவிலும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்தத் தேவதூதர்களைப் போல் பாலியல் முறைகேட்டில்* மூழ்கியிருந்தார்கள். இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டார்கள்.+ அதனால், என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது.+
-