-
எஸ்றா 9:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 “என் கடவுளே, உங்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை, அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறேன். என் கடவுளே, நாங்கள் செய்த பாவங்களுக்குக் கணக்கே இல்லை, அவை வானத்தையே தொட்டுவிடும்.+ 7 முன்னோர்களின் காலத்திலிருந்து இன்றுவரை நாங்கள் செய்துவந்திருக்கிற அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.+ அதனால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் குருமார்களும் வேறு தேசத்து ராஜாக்களின் கையில் விடப்பட்டோம், வாளுக்குப் பலியாக்கப்பட்டோம்,+ கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போகப்பட்டோம்,+ கொள்ளையடிக்கப்பட்டோம்,+ அவமானப்படுத்தப்பட்டோம். இன்றுவரை எங்கள் நிலை இதுதான்.+
-