15 ஆனால் எஜமான் அவரிடம், “நீ புறப்பட்டுப் போ, ஏனென்றால், மற்ற தேசத்து மக்களுக்கும்+ ராஜாக்களுக்கும்+ இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+
2 அவர்கள் யெகோவாவுக்கு* ஊழியம் செய்தும் விரதமிருந்தும் வந்தபோது, “பர்னபாவையும் சவுலையும் எந்த வேலைக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கிறேனோ+ அந்த வேலைக்காக அவர்களை எனக்கென்று ஒதுக்கிவையுங்கள்”+ என்று கடவுளுடைய சக்தி சொன்னது.
13 மற்ற தேசத்து மக்களாகிய உங்களிடம் இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன். மற்ற தேசத்து மக்களுக்கு நான் ஓர் அப்போஸ்தலனாக+ இருப்பதால் என் ஊழியத்தை மகிமைப்படுத்துகிறேன்.+
7 ஆனால், விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் போல், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததை+ அவர்கள் பார்த்தார்கள்.
7 இதற்காகத்தான்+ ஒரு பிரசங்கிப்பாளனாகவும் அப்போஸ்தலனாகவும்,+ அதாவது மற்ற தேசத்து மக்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் கற்றுக்கொடுக்கிற போதகனாகவும், நியமிக்கப்பட்டேன்;+ நான் சொல்வது உண்மை, பொய் அல்ல.