-
ரோமர் 15:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற சகோதரர்கள் எருசலேமில் உள்ள ஏழை எளிய பரிசுத்தவான்களுக்குச் சந்தோஷமாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.+ 27 உண்மையில், அப்படிக் கொடுப்பதற்கு அவர்கள் கடன்பட்டிருந்தார்கள். கடவுளிடமிருந்து அந்தப் பரிசுத்தவான்கள் பெற்றுக்கொண்டதை மற்ற தேசத்து மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், மற்ற தேசத்து மக்கள் தங்களுடைய பொருள்களைக் கொடுத்து அந்தப் பரிசுத்தவான்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டிருந்தார்கள்.+
-
-
பிலிப்பியர் 4:15-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 சொல்லப்போனால், பிலிப்பியர்களே, நல்ல செய்தியை நீங்கள் முதன்முதலில் கேள்விப்பட்ட சமயத்திலும், மக்கெதோனியாவைவிட்டு நான் புறப்பட்ட சமயத்திலும், உங்களைத் தவிர வேறெந்தச் சபையும் எனக்கு உதவி செய்யவோ என்னிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளவோ இல்லை;+ இது உங்களுக்கே தெரியும். 16 நான் தெசலோனிக்கேயில் இருந்த சமயத்திலும்கூட, எனக்குத் தேவையானதை ஒரு தடவை மட்டுமல்ல, இரண்டு தடவை நீங்கள் அனுப்பினீர்கள். 17 நீங்கள் கொடுக்கும் பரிசுப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம், உங்களுடைய கணக்கில் இருக்கிற தொகையை இன்னும் அதிகமாக்குகிற ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் துடிக்கிறேன்.
-