-
எபேசியர் 6:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 நல்ல செய்தியின் பரிசுத்த ரகசியத்தைத்+ தைரியமாகப் பேசுவதற்குக் கடவுள் என் வாயில் வார்த்தைகளைத் தர வேண்டுமென்று எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள். 20 இந்த நல்ல செய்திக்காகச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிற தூதுவனாகிய+ நான், அதைப் பற்றிப் பேச வேண்டிய விதத்தில் தைரியமாகப் பேசுவதற்கு எனக்காக ஜெபம் செய்யுங்கள்.
-
-
பிலிப்பியர் 1:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 உங்கள் எல்லாரையும் பற்றி நான் இப்படி நினைப்பது முற்றிலும் சரிதான். ஏனென்றால், நான் கைதியாக+ இருந்தபோதும் சரி, நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற முயற்சி செய்தபோதும்+ சரி, நீங்கள் எல்லாரும் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். என்னோடு சேர்ந்து நீங்களும் கடவுளுடைய அளவற்ற கருணையிலிருந்து நன்மை அடைந்தீர்கள். அதனால், நீங்கள் என் இதயத்தில் இடம்பிடித்துவிட்டீர்கள்.
-