உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 14:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை.

  • 1 சாமுவேல் 17:34-36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அப்போது தாவீது, “உங்கள் அடியேனாகிய நான் என்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துவருகிறேன். ஒருநாள் ஒரு சிங்கமும்,+ இன்னொரு நாள் ஒரு கரடியும் வந்து மந்தையிலுள்ள ஆட்டைக் கவ்விக்கொண்டு போனது. 35 நான் அதைத் துரத்திக் கொண்டுபோய், அதன் வாயிலிருந்து ஆட்டைக் காப்பாற்றினேன். அது என்மேல் பாய்ந்தபோது, அதன் தாடையைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். 36 சிங்கம், கரடி இரண்டையுமே அடித்துக் கொன்றேன். விருத்தசேதனம் செய்யாத இந்தப் பெலிஸ்தியனுக்கும் அதே கதிதான் வரும்! உயிருள்ள கடவுளின் படையிடமே அவன் சவால்விட்டிருக்கிறானே!”+ என்றான்.

  • தானியேல் 6:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 உடனே தானியேல், “ராஜாவே, நீங்கள் நீடூழி வாழ்க! 22 என் கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்ததால்+ அவை என்னை ஒன்றுமே செய்யவில்லை.+ நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். ராஜாவே, உங்களுக்கும் நான் எந்தக் கெடுதலும் செய்ததில்லை” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்