உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 11/8 பக். 12-13
  • பிள்ளைகளுக்கு என்ன நம்பிக்கை?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிள்ளைகளுக்கு என்ன நம்பிக்கை?
  • விழித்தெழு!—1989
  • இதே தகவல்
  • பிள்ளைகளைக் காப்பாற்ற முயற்சிகள்
    விழித்தெழு!—1994
  • சுற்றுச்சூழல் கேடு—ஆரோக்கியத்தின் அஸ்தமனம்
    விழித்தெழு!—1999
  • அதிக தட்டுப்பாடுள்ள இடம்
    விழித்தெழு!—1997
  • தேக ஆரோக்கியமும் சுற்றுச்சூழலும்
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 11/8 பக். 12-13

பிள்ளைகளுக்கு என்ன நம்பிக்கை?

மூன்றாம் உலகம் என்று அழைக்கப்படும் பிரதேசங்களில் வாழும் பிள்ளைகளுக்கு ஏற்கெனவே காலம் தாமதமாகிவிட்டது. இங்கு சிந்திக்கப்படும் வழிமுறைகள் இலட்சக்கணக்கான பிள்ளைகளைப் பாதுகாக்கும்—அவர்களுடைய பெற்றோருக்கு இவை தெரிவிக்கப்பட்டு இவற்றைப் பொருத்துவது குறித்து நம்பச்செய்யப்பட்டால். இது கூடாதது என்ற நிலைக்குச் சற்றும் குறைவாக இல்லாததால், இலட்சக்கணக்கான பிள்ளைகள் தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள்—மெதுமெதுவாக, அமைதியாக, தவிர்க்கமுடியாததாக.

மிக உயர்ந்த மட்டத்தில் சிபாரிசு பெற்ற மாபெரும் திட்டங்களும் நம்பிக்கையளிப்பதாயில்லை. உதாரணமாக, “1990-க்குள்ளாக அனைவருக்கும் சுத்தமான தண்ணீரும் சுகாதார வசதிகளும்” என்ற இலக்குடன் சர்வதேச குடி தண்ணீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (1981–1990) என்பதை ஐ. நா. சிபாரிசு செய்தது. அதன் பலன் யாது?

“1980-க்கும் 1983-க்கும் இடையில் ஆப்பிரிக்காவில் கூடுதலாக 3.2 கோடி மக்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது, கூடுதலாக 1.2 கோடி மக்களுக்குச் சுகாதார வசதிகள் கூட்டப்பட்டன,” என்று உலக ஆரோக்கியம் (World Health) பத்திரிகை அறிக்கை செய்தது. ஆனாலும், சுத்தமான தண்ணீரையும் சுகாதார வசதிகளையும் அனுபவிக்கும் மக்கள் விகிதத்தில் ஒரு சிறிய அதிகரிப்புதான் இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு கவர்ச்சியான அந்த நற்பலன்களை துடைத்தெரிந்துவிட்டது. “1990-க்குள்ளாக அனைவருக்கும் சுத்தமான தண்ணீரும் சுகாதார வசதிகளும்” என்ற இலக்கு “கூடாத நிலைக்கு அண்மையில் இருக்கிறது,” என்று சொல்லப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

என்றபோதிலும், சில சமயங்களில், நிவாரண பணிகள் தாமதப்படுத்தப்படுவதற்குக் காரணம் நிதி குறைவு அல்ல, ஆனால் பேராசை, சரியாக நிதானிக்காமல் இருத்தல், சிறு சிறு தகராறுகள் ஆகியவையே. வளரும் நாடுகள் உடல் நலத்துக்காக செலவுசெய்யும் தொகையைவிட ஆயுதங்களுக்கும் இராணுவத்துக்கும் நான்கு மடங்கு அதிகமாக செலவுசெய்கின்றன. உடல் நலத்துக்காக செலவுசெய்யப்படும் அந்தச் சிறிய தொகையில் பெரும்பகுதி உயர்-தொழில்நுட்ப பராமரிப்புக்காக—நல்வாய்ப்பிலுள்ள ஒருசிலர் நலம் பெறுவதற்காக—ஒதுக்கப்படுகிறது.

உடலில் நீரிழப்புக்கு வாய்வழியாய்ச் சிகிச்சை (ORT) முறையையும் கவனியுங்கள். இது இலட்சக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க வல்லது என்பது நன்கு அறியப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் ஐ. நா. செய்திப்பட்டியல் (UN Chronicle) குறிப்பிடுகிறபடி “மருத்துவரில் பெரும்பான்மையினர் வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எழுதுகின்றனர், அவற்றில் அநேகம் பயனற்றதும் தீங்கு விளைவிப்பதும் அல்லது இரண்டுமாக இருப்பது அறியப்பட்டிருந்தும் அப்படிச் செய்யப்படுகிறது.”

அல்லது ஸ்கிஸ்டொசோமையாசிஸ் (schistosomiasis) என்ற அசுத்த தண்ணீரால் பாதிக்கப்படும் 20 கோடி மக்களை, விசேஷமாக பிள்ளைகளைக் கவனியுங்கள். “அறிவியல் ஸ்கிஸ்டொசோமையாசிஸ் நோயின் காரணத்தை அறிந்திருக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிகாரமாக அமையும் மருந்துகளை பரிசோதித்திருக்கிறது, வரக்கூடிய ஆண்டுகளில் இந்த நோயின் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கவல்ல திறம்பட்ட வழிமுறைகளையும் விருத்திசெய்திருக்கிறது,” என்று கொலையாளிகளைத் தேடுதல் (Quest for the Killers) என்ற நூலில் ஜூன் குட்ஃபீல்டு எழுதுகிறார். அப்படியென்றால் இந்த நோய் ஏன் இன்னும் இருந்துவருகிறது? “இப்பொழுது பிரச்னை அரசியல்” என்று எழுதுகிறார் குட்ஃபீல்டு.

ஆம், பிள்ளைகளை உயிரோடு வைப்பதற்கான அறிவு அல்லது வளம் மனிதனுக்குக் குறைவுபடுவதால் அவர்கள் மரிக்கிறார்கள் என்பதல்ல, மனித உயிரைவிட அரசியல் முன்னேற்றத்தையும் தனிப்பட்ட இலாபத்தையுமே அவன் மதிக்கிறான். எரேமியா 10:23-ன் வார்த்தைகள் உண்மையென நிரூபித்திருக்கிறது: “மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, . . . தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல.” உலகத்திலுள்ள பிள்ளைகளுக்கு—ஆம், மனித குலத்துக்கே—ஒரே நம்பிக்கை இந்தப் பூகோளத்தை ஆளும் பொறுப்பைக் கடவுள் எடுத்துக்கொள்வதாகும். அதைத்தானே செய்வதற்குக் கடவுள் நோக்கங்கொண்டிருக்கிறார்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [உடன் இயங்கும் அரசாங்கங்களையெல்லாம்] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிலைநிற்கும்.”—தானியேல் 2:44.

கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் கீழ், உலகத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நோயாலும் மரணத்தாலும் அச்சுறுத்தப்படமாட்டார்கள். எனவே பூமியின் விவகாரங்கள் இந்தத் தெய்வீக ஆட்சியால் எடுத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்துக்காக யெகோவாவின் சாட்சிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தபடியே அவர்கள் ஜெபிக்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) மூன்றாம் உலகின் பிள்ளைகளுடைய நிலைதானே கடவுள் பயம் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட ஆட்களை இந்த ஜெபத்தை அதிக ஊக்கமாக ஏறெடுக்கச் செய்கிறது.a (g88 9⁄22)

[அடிக்குறிப்புகள்]

a கூடுதல் தகவலுக்குக் காவற்கோபுரம் பைபிள் சங்கம் பிரசுரித்திருக்கும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்ற புத்தகத்தைப் பார்க்கவும், அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களை சந்திப்பதற்காக அவர்கள் மகிழ்ச்சியோடு ஏற்பாடு செய்வார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்