‘எங்கள் புதல்விகள் நெருங்கிய பாசத்துடன் இருக்கும்படி உதவி செய்தது’
இதையே என்னுடைய பைபிள் கதை புத்தகம் நிறைவேற்றியதெனக் கூறி, முரீவா, ஸிம்பாப்வேயில் உள்ள ஓர் உபாத்தினி உவாட்ச் டவர் சொஸயிட்டி கிளை அலுவலகத்துக்கு எழுதினாள். அவள் இந்தப் பிரசுரத்தை உடனுழைக்கும் உபாத்தியாயரிடமிருந்து பெற்று பின்வருமாறு அறிவித்தாள்:
“அந்தப் புத்தகத்திலிருந்து மிகச் சிறந்ததை அடைவது எவ்வாறு என்பதன்பேரில் அவர் கொடுத்த ஆலோசனையை நான் பின்பற்றி, முதல் என் 8-வயது புதல்வியுடனும் பின்பு தங்கும் வசதியுடைய உயர்நிலைப்பள்ளியில் இருந்த 16 மற்றும் 18 வயதான மற்ற இரு புதல்விகளுடனும் படித்தேன். என் புதல்விகள் மூவரிடமிருந்தும் கிடைத்தப் பிரதிபலிப்பு நிச்சயமாகவே வெகு ஊக்கமூட்டுதலாக இருந்ததென்று உங்களுக்கு அறிவிப்பதில் நான் மிகுந்த இன்பங்கொள்ளுகிறேன். அதுமுதற்கொண்டு அவர்களுடைய ஒழுக்க நடத்தை நன்மைக்கேதுவாகக் கவனிக்கத்தக்கதாய் மாறிக்கொண்டிருக்கிறது.” இந்தத் தாய் மேலும் கூறினதாவது: “இந்தப் புத்தகம் எங்கள் புதல்விகளை, அவர்களுடைய பெற்றோராகிய எங்களுடன், முன்னொருபோதும் இருந்ததைப் பார்க்கிலும் அதிக நெருங்கிய பாசத்துடனிருக்க வெற்றிகரமாய் உதவி செய்திருக்கிறது.”
இந்தப் பத்திரிகையைப்போன்ற இதே பக்க அளவான, இந்த 256-பக்க பிரசுரம், பின்வரும் கூப்பனை நிரப்பி ரூ40 உடன் தபாலில் அனுப்புவதன்மூலம் கிடைக்கப்பெறும். இந்தப் புத்தகத்தின் 116 பைபிள் விவரங்கள் பொதுவாய் பைபிளில் அடங்கியிருப்பவற்றைப் பற்றிய ஓர் அபிப்பிராயத்தை வாசகருக்குக் கொடுக்கின்றன. இந்தக் கதைகள் அந்தச் சம்பவங்கள் சரித்திரத்தில் நடைபெற்ற காலவரிசையில் தோன்றுகின்றன. சரித்திரத்தில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டு, காரியங்கள் எப்பொழுது நிகழ்ந்தனவென்று கற்றறிவதில் இது உண்மையில் உதவியாக இருப்பதாய் நீங்கள் காண்பீர்கள். இந்தப் புத்தகம் அழகிய முறையில் படவிளக்கங்கள் அடங்கியதாய்ப் பெரிய அச்சில் உள்ளது.
என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற உறுதியான அட்டையையுடைய புத்தகத்தை, தபால் செலவில்லாமல், தயவுசெய்து அனுப்புங்கள், அதற்காக இத்துடன் ரூ40.00 அனுப்பியுள்ளேன்.