இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்துக்கு வாசகரின் பிரதிபலிப்பு
சிலர் தாங்கள் தொந்தரவில் இருப்பதாக நினைத்தார்கள். “எங்களுடைய நடத்தையின் பேரில் அவர்கள் புத்திமதிகூற விரும்பினார்கள் என்று நான் நினைத்தேன்,” என்பதாக ஷெரிடா என்ற பெயர் கொண்ட 15 வயது பெண் சொன்னாள். மற்றவர்கள் வெறுமென அசெளகரியமாக இருந்தார்கள். தீமோத்தி என்ற பெயர் கொண்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்து வயது பையன் நினைவுபடுத்தி சொல்கிறான்: “என் அம்மாவையும் அப்பாவையும் விட்டு பிரிந்து உட்கார வேண்டும் என்று நான் அறிந்தபோது, எனக்குப் போக விருப்பமில்லை.”
இந்தக் கவலைக்குக் காரணம் என்ன? 10-க்கும் 19-க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள இளைஞர்கள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியில் அமரவேண்டும் என்பதாக 1989-ம் ஆண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டில்a வெள்ளி காலை ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம் வெளியிடப்பட்டு அங்கிருந்த எல்லா இளைஞருக்கும் அது இலவசமாக விநியோகிக்கப்பட்ட போது எல்லா அச்ச உணர்வும் அமைதியானது. பிரதிபலிப்புகள்?
“வார்த்தைகள் எனக்கு கிடைக்கவில்லை; கண்ணீர் முகத்தில் வழிந்தது.”—மைக்.
“புத்தகத்திலுள்ள அற்புதமான தகவலை நான் பார்த்தபோது என் கண்களில் அது கண்ணீரை வரவழைத்தது. அது யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிடமிருந்து இளைஞருக்கு கொடுக்கப்படும் பரிசு என்ற உண்மைதானே, அவர்கள் எங்கள் மீது எவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது.”—பதினெட்டு வயது மார்கி.
அண்மையில் தன் அப்பாவை இழந்த பத்து வயது பெண் நகோமி, புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதில் போற்றுதலை தெரிவித்தாள். அவள் நினைவுபடுத்தி சொல்கிறாள்:
“என் அப்பா இல்லாமல் எங்கள் குடும்பம் சென்ற முதல் பெரிய மாநாடாக இது எங்களுக்கு இருந்தது. முதல் நாள் நான் அதிக வருத்தமாக இருந்தேன். புதிய உலகில் எங்களுக்கு எங்கள் அப்பா கிடைக்கும்வரையாக நம்முடைய சகோதரர்களும் நம்முடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவும் எங்களை கவனித்து வருகிறார்கள் என்பதை அறிவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.”
இப்புத்தகம், 1982 முதல் 1989 வரையாக விழித்தெழு! பத்திரிகையில் தோன்றியிருக்கும் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகள் பாதியின் சுருக்கத்தைக் கொண்டிருக்கின்றது. இதில் 39 அதிகாரங்களும், பொருள் வாரியாக பத்து பகுதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. (அடுத்த பக்க பெட்டியை பார்க்கவும்.) கைக்கு அடக்கமாக ஒரே புத்தகத்தில் இந்த எல்லா தகவலையும் கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்கிறது? ஓர் இளைஞன் விளக்குகிறான்: “ஒரு பிரச்னையில் எனக்கு உதவி செய்ய முந்திய “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகளை நான் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது அநேகமாக தெரிந்திருந்தது, ஆனால் நான் ஒருபோதும் அதை எடுத்துப் பார்க்க முடிந்ததில்லை. இப்பொழுது ஒரு வழிகாட்டியாக உபயோகிக்க எந்தச் சமயத்திலும் நான் எடுக்கக்கூடிய ஒரு பிரசுரம் இருக்கிறது.”
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்துக்கு வல்லமவாய்ந்த காட்சிக்குரிய கவர்ச்சியும்கூட இருக்கிறது. “வண்ணப் படங்கள் எனக்குப் பிடித்திருக்கிறது” என்பதாக 11 வயது ஹெதர் சொல்கிறாள். புகைப்படங்கள் உலகம் முழுவதிலுமுள்ள இளைஞரை வருணிக்கின்றன. கானடா தேசத்து இளைஞன் ஒருவன் சொன்னான்: “படங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் ஒரு பிரச்னையை எதிர்ப்படுகையில் எங்களுக்கு ஏற்படும் உண்மையான உணர்ச்சிகளை நேர்த்தியாக காட்டுபவையாகவும் இருக்கின்றன.” உடனடியாகவே அநேக இளைஞர் அதன் பொருளடக்கத்தை கருத்தூன்றி படிக்க ஆரம்பித்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
‘அதை வாசிப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை’
தங்கும் விடுதியிலிருந்த ஒரு காகிதத்தில், 17 வயது பெண் எழுதினாள்:
“மாநாடு முடிந்து பாதி தூரம் வந்து விட்டோம். இன்னும் நான்கு மணி நேரம் நாங்கள் பயணம் செய்ய வேண்டும். நான் ஏற்கெனவே பத்து அதிகாரங்களை வாசித்துவிட்டேன்.”
சிலர் பொருளடக்க அட்டவணையினால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்:
“நான் பொருளடக்க அட்டவணையை வாசிக்கையில், என்னுடைய சொந்த வாழ்க்கையைப் பார்ப்பது போல் இருந்தது. அநேக கேள்விகள் எப்போதாவது ஒரு சமயம் என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்விகளாக இருந்தன.”—பதினாறு வயது கேத்தி.
“வாசிப்பதில் விருப்பமில்லாத” சிலரும்கூட ஆதாயப்படுத்திக் கொள்ளப்பட்டனர்:
“அதிகமாக வாசிப்பது எனக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகம் அத்தனை நன்றாக இருப்பதால், அதை வாசிக்க ஆரம்பித்தால் அதை என்னால் கீழே வைக்க முடியாது. ஏறக்குறைய முழு புத்தகத்தையும் மூன்று நாட்களில் நான் வாசித்துவிட்டேன்.”—பதினைந்து வயது ஜென்னிஃபர்.
“நான் நன்றாக வாசிப்பவன் அல்ல, அதிகம் வாசிப்பதும் இல்லை. நான் மாநாடு முடிந்து வீடு திரும்பிய யோது, எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது, என் கண்களை திறக்கக்கூட முடியவில்லை. ஆனால் நான் இந்தப் பிரசுரத்தைப் புரட்டினேன், வாசிக்க ஆரம்பித்தேன், ஒரு முழு அதிகாரத்தையும் வாசித்துவிட்டேன்! அப்போது முதற்கொண்டு, இன்று இரவு வரையாக—இன்று இரண்டு வாசித்தேன்—ஒவ்வொரு நாளும் ஓர் அதிகாரத்தை வாசித்து வந்திருக்கிறேன்.”—பதினேழு வயது டிஃபேனி.
ஒரு சில சந்தேகப் பேர்வழிகளும் இருந்தனர்:
“புத்தகத்திலுள்ள சில பகுதிகளை வாசிப்பதற்கு நான் சற்று அதிகமான வயதிலிருப்பவள் என்பதாக நினைத்தேன். ஆகவே பகுதி 6-ல் ‘பாலுறவும் ஒழுக்கநெறிகளும்’ வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு சில முக்கிய தீர்மானங்களைச் செய்வதில் இது எனக்கு பெரிய உதவியாக இருந்தது. இந்தப் புத்தகத்துக்கு எவருமே அதிக வயதானவர்கள் அல்ல!”—பத்தொன்பது வயது சபிரினா.
ஆம், முடித்தபின்பு, அநேகர் ஒருமுறை வாசிப்பது போதுமானதாக இல்லை என்பதாக நினைக்கிறார்கள்:
“ஓராண்டுக்கு முன்பாக நான் முழுக்காட்டப்பட்டேன், ஆனால் காரியங்கள் அதிக சிக்கலாக இருந்தன, நான் சோர்வடைந்துவிட்டேன். ஒருசமயம் நான் வீட்டை விட்டும்கூட ஓடிவிட்டேன்! ஆகவே நான் புதிய புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட போது, எனக்கு எது தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார் என்பதாக நான் உணர்ந்தேன். அது அற்புதமாக உள்ளது! நான் ஏற்கெனவே இரண்டு முறை அதை வாசித்துவிட்டேன்”—J. S.
“நான் ஒவ்வொரு வசனத்தையும் வார்த்தைக்கு வார்த்தை இப்புத்தகத்தின் உள்ளே எழுதி வைக்கிறேன். இரண்டாவது முறை புத்தகத்தை வாசிக்கையில் எனக்கு சுலபமாக இருக்கும். மிகைப்படுத்திக் கூறவில்லை: இந்தப் புத்தகம் என்னை மேம்பட்ட ஒரு நபராக ஆக்கியிருக்கிறது.”—பதினெட்டு வயது ஏடியா.
‘நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லப்படுவதாக நீங்கள் ஒருபோதும் உணருவதில்லை’
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் வெளிவந்து ஒரு வருடத்துக்கும் மேலாக கடந்துவிட்டிருக்கிறது, என்றபோதிலும் பாராட்டு குறிப்புகள் வந்தவண்ணமே இருக்கின்றன. இதன் வெற்றிக்கு ஒரு காரணம், இது இளைஞருக்காக எழுதப்பட்டபோதிலும், புத்தகம் சிறுபிள்ளைத்தனமாக இல்லை; அல்லது தங்களுக்கு பிரசங்கிக்கப்படுகிறது என்பதாக வாசகர் உணரும் வகையிலும் அது எழுதப்படவில்லை. சில இளைஞர் இவ்விதமாகச் சொல்லுகிறார்கள்:
இந்தப் புத்தகத்தில் சிறிதளவு நகைக்சுவையும்கூட இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஆதாரமாகக் கொண்ட இது, பருவ வயது பத்திரிகை எதையும்விட மிக மேலானதாக இருக்கிறது.”
“நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படுவதாக நீங்கள் ஒருபோதும் உணருவதில்லை; மாறாக, பல்வேறு சாத்தியங்களையும், ஒவ்வொன்றின் விளைவுகளையும் குறித்து நீங்கள் உணர்த்தப்படுகிறீர்கள். யெகோவாவின் நோக்குநிலை எப்பொழுதும் தெளிவாக காண்பிக்கப்பட்டு, வேதபூர்வமாக ஆதாரம் கொடுக்கப்படுகிறது.”
எழுத்தின் பண்புக்கும், அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு அது காட்டிய உட்பார்வைக்கும் அநேகர் போற்றுதலை தெரிவித்தார்கள்.
“என்னுடைய அப்பா எவ்வகையிலும் எனக்கு பாசத்தை ஒருபோதும் காண்பித்தது கிடையாது, ஆனால் புத்தகத்திலுள்ள புத்திமதி நம்முடைய நன்மைக்காக நமக்கு புத்தி சொல்லும் ஓர் அன்புள்ள தகப்பனிடமிருந்து வருவது போல் தோன்றுகிறது.”—ஸ்டெஃபினோ, இத்தாலி.
“அச்சடிக்கப்பட்ட ஒரு பக்கத்தை வாசிப்பதாக இல்லாமல், என்னை மிக நன்றாக தெரிந்து வைத்திருந்த ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வே எனக்கு உடனடியாக ஏற்பட்டது.”—மிரியாம், இத்தாலி.
“பயன்படுத்தப்பட்டுள்ள அநேக உதாரணங்கள் மிகவும் பழக்கப்பட்டவையாக இருந்தன, முழுவதையும் என்னால் சம்பந்தப்படுத்திக் காண முடிகிறது.”—பருவ வயது பெண்.
“ஆளும் குழுவில் பருவ வயதினர் எவரும் இல்லை என்பது எனக்குத் தெரியும். என்றபோதிலும், இளைஞரைப் பற்றி நீங்கள் எழுதும் அனைத்தும் அத்தனை துல்லிபமாக இருக்கிறது; யெகோவாவே நேரடியாக பேசுவது போல இருக்கிறது.”—பதினைந்து வயது ஆப்ரி.
வெறும் இளைஞருக்கு மட்டுமல்ல
அநேக அதிகாரங்கள் வயது வந்த கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் கூச்ச உணர்வு, சோர்வு, தனிமை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளுக்குள் உட்பார்வை அளிக்கிறது. அப்படியென்றால் வயது வந்த பெரியவர்கள் அநேகரும்கூட புத்தகத்துக்கு பாராட்டு தெரிவித்திருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாண ஊழியர் ஒருவரின் மனைவி இவ்விதமாகச் சொன்னாள்:
“என்னுடைய கணவனுக்கும் எனக்கும் சொந்தமாக பிள்ளைகள் இல்லை. என்றபோதிலும், தகவல் அளிக்கப்பட்டிருக்கும் விதம் எங்களுக்கும்கூட பயனுள்ளதாக இருப்பதை நான் அறிந்தேன். புத்தகத்தின் தலைப்பு “மக்கள் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்!” என்பதாகவே இருந்திருக்கலாம்.”
வயது வந்த மற்ற பெரியவர்கள் மனதார ஒப்புக்கொள்கிறார்கள்:
“என்னுடைய 41-வது வயதில் வாழ்க்கைக்கு அதிக பிரயோஜனமாக இருந்திருக்கும் வாக்கியங்களும், சொற்றொடர்களும் நியமங்களும் இருக்கின்றன.”
“இளைஞருக்காக எழுதப்பட்ட ஒரு புத்தகம் 61 வயதான பெண்ணுக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவே மாட்டீர்கள். ஆனால் கடந்த காலத்தைக் குறித்து நேர்நிலையாக சிந்திக்கவும் என் பெற்றோருக்கு எதிராக நான் கொண்டிருந்த மனவெறுப்பை விட்டுவிடவும் எனக்கு அது உதவியது.”
“‘வயதானவர்கள் கேட்கும் கேள்விகள்’ கூட நான் கண்டேன். நீண்ட காலமாக ஒரு கிறிஸ்தவனாக, வேறு எதுவும் என்னை நானே புரிந்து கொள்ள எனக்கு உதவியது இல்லை. நான் 74 வயது இளைஞன்.”
அநேக கிறிஸ்தவ பெற்றோரிடமிருந்தும்கூட கடிதங்கள் பெறப்பட்டிருக்கின்றன:
“எனக்கு பருவ வயதில் மூன்று பேர் இருக்கிறார்கள். இந்தப் புத்தகம், என் ஜெபங்களுக்கு விடையாக இருந்தது. எங்களுக்காக நீங்கள் இருப்பதற்காக உங்களுக்கு நன்றி. என் பிள்ளைகள் விலகிப் போக சாத்தான் எல்லாவற்றையும் முயற்சிசெய்து வருகிறான். ஆனால் இப்பொழுது, என்னால் இயன்றதை திறமையோடு செய்வதற்கு நான் ஆயத்தமாயிருக்கிறேன். தக்கசமயத்தில் வந்த இந்தப் புத்தகத்திற்கு நன்றி.”
“நாளுக்கு–நாள் என்ற அடிப்படையில் இந்த ஒழுங்குமுறை நம்மை சோர்ந்து போகச் செய்து வருகிறது. என் சிறிய பிள்ளைக்கு வயது 12, கடந்த ஓராண்டில் ஆவிக்குரிய காரியங்களில் அவனுடைய அக்கறை வெகுவாக வளர்ந்துவிட்டிருக்கிறது. மாநாடு மற்றும் இந்தப் புதிய புத்தகத்தின் விளைவாக அவன் முழுக்காட்டப்படுதலை நோக்கி கிரியை செய்து கொண்டிருப்பதைக் காண்பது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியாது.”
“என் பிள்ளைகள் அவர்களுடைய பிரதிகளைப் பெற்றுக்கொண்ட போது என் கண்களில் நீர் வழிந்தது. தங்கள் இளைஞரைக் குறித்து வேறு எந்த மத அமைப்பும் இத்தனை அக்கறை எடுத்துக் கொள்வது கிடையாது!”
“நான் ஓர் ஒற்றை–பெற்றோர். எனக்கு உண்மையில் பயமாகவும் பெற்றோராக நான் போதிய அளவு தகுதி பெற்றிராதவளுமாக இருப்பதாக உணருகிறேன். என் மூத்த மகனுக்கு வயது 11, அவனைப் பிடிக்காத ஓர் ஆசிரியரை அவன் கொண்டிருக்கிறான். அந்த நிலைமையைப் பற்றி கையாளும் ஓர் அதிகாரத்தை இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் காண்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!”
ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் காணப்படும் “கலந்து பேசுவதற்கான கேள்விகள்” என்றழைக்கப்படும் அம்சத்தின் மதிப்பை அநேகர் உறுதிப்படுத்தினார்கள்.
“ஒழுங்கான குடும்ப வேத படிப்பின் பாகமாக நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து புத்தகத்தை வாசிக்கிறோம். அது எங்கள் அனைவரையும் நெருங்கி வரச்செய்திருக்கிறது. கேள்விகள் அவர்களைத் தளர்ந்த நிலையில் வைப்பதையும், வாய் விட்டுச் சொல்ல சுலபமாயிராத உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் உண்மையில் இது உதவியாக இருப்பதை நான் காண்கிறேன்.”
உண்மையில் பலன்தரும் விடைகள்!
இப்புத்தகம் எவ்வளவு பயனுள்ளது என்பதைத் தீர்மானிப்பது, எத்தனை பேரால் அது விரும்பப்படுகிறது என்பது அல்ல, ஆனால் அது எவ்வளவு நடைமுறைப் பயனுள்ளது என்பதே. வேறு வார்த்தையில், அதன் விடைகள் உண்மையில் பலன்தருகின்றனவா? பலன்தருகின்றன என்பதாக அநேக இளைஞர்கள் உற்சாகமாக ஆமோதிக்கின்றனர்:
“இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பாக, வீட்டில் என்னால் தனியாக இருக்க முடியாது என்பதால் மட்டுமே ராஜ்ய மன்றத்துக்கு என் அம்மாவோடும் அக்காவோடும் நான் ஒட்டிக்கொண்டு வருவதுண்டு. நான் ஓர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். இப்பொழுது அது எல்லாமே, நன்மைக்காக மாறிவிட்டது.”
“நீங்கள் சத்தியத்தை விட்டுவிடலாம், ஆனால் அது உங்களை விடுகிறதில்லை. 27 வயதில் நான் ராஜ்ய மன்றத்துக்கு—தனிமையில், பயத்தோடு, மனந்திரும்பியவனாக—திரும்பி வர முயன்றேன். எனக்கு மிக மோசமான கெட்ட பழக்கங்கள் இருந்தன, கடவுள் ஒருபோதும் என்னை மன்னிக்க மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் வயதான ஒரு சகோதரி புதிய இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை எனக்குத் தந்தாள். அது என்னுடைய எல்லா பிரச்னைகளையும், அவைகளை எவ்விதமாக கையாளுவது என்பதையும் சிந்தித்ததை நான் கண்டேன். நான் அழுதுவிட்டேன். இந்தப் புத்தகத்துக்கு போதிய அளவு போற்றுதலை என்னால் வெளியிடமுடியாது. பலன் தரும் விடைகள்—எப்படி!!!”
“புத்தகம், என்னைச் சற்று பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வைத்தது. முதலில் நான் உண்மையில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக என்னை கருதவில்லை. எனக்கு ஒரு பெண் சிநேகிதி இருந்தாள். நான் உலக ஆட்களோடு சென்றுகொண்டிருந்தேன். திருடும் பழக்கமும் எனக்கு இருந்தது. ஆனால் புத்தகத்தை வாசித்தப் பிறகு, நான் என் வாழ்க்கையில் தவறானதை செய்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். என்னை மன்னிக்கும்படி நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். மகத்தான இந்தப் புத்தகத்தை எனக்கு கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.”
பெற்றுக்கொள்ளப்பட்ட நூற்றுக்கணக்கான கடிதங்களில் இவை வெறும் மாதிரிகளே. இளைஞராகிய உங்களின் சிறந்த பிரதிபலிப்பினால் நாங்கள் உற்சாகமடைகிறோம், வெகுவாக உணர்ச்சியூட்டப்படுகிறோம். நீங்கள் சரியானதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதும் யெகோவா அவருடைய வார்த்தையின் மூலமாக அன்பாக அளித்துவரும் அறிவுரையை நீங்கள் போற்றுகிறீர்கள் என்பதும் தெளிவாக இருக்கிறது. கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் பதில்கள் உண்மையாகவே பலன்தருகிறது என்பதும்கூட தெளிவாக இருக்கிறது!
ஆகவே விழித்தெழு! பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர் கட்டுரைகள், உங்களுக்கு அக்கறையாயிருக்கும் தலைப்புகள் பேரில் தொடர்ந்து சரியான, பைபிள் ஆதாரமுள்ள அறிவுரைகளை வழங்கி வரும் என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஒரு கட்டுரையைக் கூட தவறவிட்டு விடாதீர்கள்! ஏற்கெனவே நீங்கள் அதைச் செய்திராவிட்டால், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் பிரசுரத்தை வாசியுங்கள்—மறுபடியும் வாசியுங்கள்.b உங்கள் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். கொடுக்கப்பட்ட வேதவசனங்களை எடுத்துப் பாருங்கள். உங்கள் பெற்றோரோடு அதிகாரங்களை கலந்து பேசுங்கள். அதன் புத்திமதியைப் பின்பற்றுங்கள். 16 வயது கென்ட் சொல்வதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை: “என்னுடைய வாழ்க்கையில் உணர்ச்சிகள் மிகுந்த வருடங்களினூடே எனக்கு உதவிசெய்ய ஒரு கையேட்டை வைத்திருப்பது போல அது இருக்கிறது.” (g90 9/8)
[அடிக்குறிப்புகள்]
a ஜுன் 1989 ஆரம்பித்து உலகம் முழுவதும் நடத்தப்பட்டது.
b இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்களுக்கு எழுதிப்பெறலாம்.
[பக்கம் 11-ன் பெட்டி/படம்]
பொருளடக்கம்
பகுதி 1
இளைஞர் கேட்கும் கேள்விகள் பலன்தரும் விடைகள்
வீட்டில் குடும்ப அங்கத்தினரோடு நடைமுறைத் தொடர்பு
அதிகாரம் பக்கம்
1 நான் ஏன் ‘என் தகப்பனையும் என் தாயையும் கனம்பண்ணவேண்டும்’? 11
2 என் பெற்றோர் என்னை ஏன் புரிந்துகொள்வதில்லை? 18
3 என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது? 26
4 அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிந்தார்கள்? 34
5 என் பெற்றோரின் மறுமணத்தின்பேரில் நான் எவ்வாறு என்னை நடத்திக்கொள்வது? 42
6 என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப்போவது ஏன் அவ்வளவு கடினம்? 50
7 நான் வீட்டைவிட்டுப் பிரிந்துசெல்லவேண்டுமா? 56
பகுதி 2
நீயும் உன் சகாக்களும்
8 நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்? 65
9 சகாக்களின் செல்வாக்கு வலிமையை நான் எவ்வாறு எதிர்த்துச் சமாளிக்கலாம்? 73
பகுதி 3
உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்
10 தோற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை? 82
11 என் உடைகள் உண்மையான என்னை வெளிப்படுத்துகிறதா? 90
பகுதி 4
நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?
12 என்னை நான் ஏன் விரும்புகிறதில்லை? 98
13 நான் ஏன் அவ்வளவு மனச்சோர்வடைகிறேன்? 104
14 என் தனிமையுணர்வை நான் போக்குவது எவ்வாறு? 115
15 நான் ஏன் அவ்வளவு வெட்கப்படுகிறேன்? 121
16 என்னைப்போல் இவ்வாறு துயரப்படுவது இயல்பானதா? 127
பகுதி 5
பள்ளியும் வேலையும்
17 நான் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட வேண்டுமா? 134
18 என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு? 140
19 அந்தப் பிள்ளைகள் என்னை ஏன் சும்மா விடுகிறதில்லை? 150
20 என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு? 158
21 நான் ஒரு வேலையை அடைவது (மற்றும் காத்துக்கொள்வது!) எவ்வாறு? 166
22 வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ளவேண்டும்? 174
பகுதி 6
பாலுறவும் ஒழுக்க நெறிகளும்
23 விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன? 181
24 விவாகத்துக்கு முன்னான பாலுறவுக்கு நான் மறுப்புத் தெரிவிப்பது எப்படி? 192
25 தற்புணர்ச்சிப் பழக்கம்—அது எவ்வளவு வினைமையானது? 198
26 தற்புணர்ச்சிப் பழக்கம்—அதற்கான தூண்டுதலை நான் எப்படி எதிர்த்து நிற்கக்கூடும்? 205
27 நேர்மை—அதுவே உண்மையில் தலைச்சிறந்த கொள்கையா? 212
பகுதி 7
எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்
28 மோகத்தை நான் எவ்வாறு மேற்கொள்ளமுடியும்? 219
29 எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபட நான் தயாரா? 225
30 நான் விவாகத்துக்குத் தயாரா? 236
31 அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது? 242
32 ஒரு விவாக நோக்குடன் பழகுவதில் நான் வெற்றி காண்பது எப்படி? 252
பகுதி 8
போதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி
33 குடித்தல்—ஏன் கூடாது? 262
34 போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்லவேண்டும்? 272
பகுதி 9
ஓய்வு நேரம்
35 நான் எதை வாசிக்கிறேன் என்பது ஒரு பொருட்டா? 283
36 டெலிவிஷன் பார்க்கும் என் பழக்கத்தை நான் எப்படிக் கட்டுப்படுத்தலாம்? 289
37 நான் ஏன் எப்போதாவது ஒருமுறை இன்பமாக பொழுதைக் கழிக்கக்கூடாது? 296
பகுதி 10
உங்கள் எதிர்காலம்
38 எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது? 305
39 நான் கடவுளிடம் எப்படி நெருங்கிவரக்கூடும்? 311
[பக்கம் 12-ன் பெட்டி]
‘புத்தகத்தில் எனக்குப் பிடித்த பகுதி . . . ’
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் (கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள) பத்துப் பகுதிகளில் குறிப்பாக தங்களுக்கு எது உதவியாக இருந்தது என்பதைக் குறித்து அநேக இளைஞர் கருத்து தெரிவித்தனர்:
வீட்டில்: “என் தங்கையும் நானும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்போம். ஆனால் என் தங்கையிடம் அன்புள்ளவளாக இருக்க புத்தகம் எனக்கு உதவியிருக்கிறது. நாங்கள் சண்டை போட்டால், நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாங்கள் சொன்னதை உண்மையில் திட்டமிட்டு சொல்லவில்லை என்று சொல்லிவிடுகிறோம்.”
என் தங்கை அவள் விரும்பிய அனைத்தையும் பெற்றுக்கொண்டதாக நான் யோசிப்பதுண்டு, ஆனால் அவள் மீது நான் பொறாமையாயிருந்தேன் என்பது இப்பொழுது தெரிகிறது. என்னுடைய பெற்றோர் நியாயமில்லாமல் நடந்துகொள்ளவில்லை என்பதும், தங்கள் அன்பைச் சுற்றி விரிவாக்கவுமே தங்களாலான மிகச் சிறந்ததை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரிகிறது.”
“என் அம்மாவும் அப்பாவும் பிரிந்தது என்னால் இல்லை என்பதை அறிந்து கொள்வது எனக்கு உதவியாக இருந்தது.”
நீயும் உன் சகாக்களும்: “எனக்கு ஒரு நண்பன் வேண்டுமென்றால், நான் ஒரு நண்பனாக இருக்கவேண்டும் என்பதை புரிந்து கொள்ள இது எனக்கு உதவியது. மேலுமாக கெட்ட கூட்டுறவாக இருக்கும் பிள்ளைகளோடு சுற்றிக்கொண்டிருக்கக் கூடாது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.”
உன் தோற்றத்துக்குப் பார்வை செலுத்துதல்: “நான் அதிக பருமனாக இருப்பதாக நினைத்து சில நாட்கள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தேன். ஆனால் அடுத்த நாள் நான் அதிகமாக சாப்பிட்டு, இழந்த எடையை திரும்ப பெற்றுவிடுவேன். நான் அசிங்கமாகவும் கவர்ச்சியற்றவளாகவும் இருக்கிறேன் என்று முடிவு செய்தேன். ‘தோற்றங்கள்’ பற்றிய பகுதியை வாசிக்கும்படியாக ஓர் அன்புள்ள சிநேகிதி எனக்குச் சொன்னாள். நான் வாசிக்கையில், கண்ணீர் என் முகத்தில் வழிந்தது. முந்துரிமை பெற வேண்டியவற்றை நான் இப்பொழுது ஒழுங்குசெய்துவிட்டேன், என்னுடைய தோற்றத்தின் மீதல்ல, கடவுளுக்கு என்னுடைய சேவையின் மீதே நான் என் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறேன்.”
நான் ஏன் இவ்வாறு உணருகிறேன்?: “பலமான தற்கொலை எண்ணங்கள் கொண்டிருக்கும் அளவுக்கு நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன். இப்பொழுது நான் என் பயங்களை எதிர்ப்பட முயற்சி செய்யவும் வல்லுநர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ளவும் ஆரம்பித்திருக்கிறேன். இந்த ‘ஓயாத திகிலுக்கு’ முடிவு வரும் என்பதை வாசிப்பது எனக்கு பெரும் நிம்மதியளிப்பதாக இருந்தது.”
பள்ளியும் வேலையும்: “மார்க்குகள் வாங்குவதிலும் பள்ளியில் மற்றவர்களால் தாக்கப்படுவதிலும் எனக்குப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. பள்ளியில் புத்திமதியை பின்பற்ற நான் திட்டமிட்டிருக்கிறேன்.”
பாலுறவும் ஒழுக்கநெறிகளும்: “தவறு செய்வதற்காக, பருவ வயதினர் மீது அதிகமான அழுத்தங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் பைபிள் நியமங்களை பொருத்துவதன் மூலம் என் சகாக்களை நான் எதிர்க்கமுடியும்.”
“எனக்கு தற்புணர்ச்சி பிரச்னை இருக்கிறது, அது எனக்கு பெரும் வேதனையைத் தருகிறது. ஆனால் இந்தப் புத்திமதியை பின்பற்ற உண்மையாக முயற்சி எடுத்து, என் பரலோகத் தகப்பனுக்கு மிகச் சிறந்த இளைஞனாக இருக்க முயற்சி செய்வேன்.”
எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்: “இப்பொழுது கொஞ்ச காலமாக நான் ஒரு பெண்ணோடு மோகத்தைக் காட்டிலும் அதிகமான உணர்ச்சியைக் கொண்டிருந்தேன். நான் முட்டாள்தனமான காரியங்களைச் செய்து அவளோடு இருக்கையில் நான் சங்கடத்துக்குள்ளாவதில்லை. என்றாலும், நீங்கள் விவரித்திருந்த உணர்ச்சிகள் எனக்கு இருந்தன. இது வெறுமென ஒரு மோகம் என்பதையும் இன்னும் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பில் ஈடுபட நான் போதிய வயதுடையவனாக இல்லை என்பதையும் உணர்ந்துகொள்ள புத்தகம் உதவி செய்தது.”
போதை மருந்துகள், மது இவைகளின் கண்ணி: “நான் உயர்நிலைப் பள்ளியில் ஒரு புதிய மாணவன், ஏற்கெனவே அவர்கள் எனக்கு போதைப் பொருட்களை அளிக்க முன்வந்திருக்கிறார்கள். புத்தகம் முடியாது என்று சொல்வதற்கு எனக்கு உதவி செய்கிறது.”
ஓய்வுநேரம்: “நான் திங்கள் முதல் வெள்ளி வரை டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருப்பேன். டெலிவிஷன் பார்ப்பதை—ஞாயிறு மற்றும் வெள்ளிக்கு மட்டுமே குறைத்துவிட புத்தகம் எனக்கு உதவியது!”
உங்கள் எதிர்காலம்: “பைபிள் வாசிப்பது சலிப்பூட்டுவது என்பதாக நான் யோசித்ததுண்டு—ஆனால் இனிமேலும் அவ்வாறு யோசிப்பதில்லை! ஒவ்வொரு நாளும் 15 நமிடங்கள் அதை வாசிக்க நான் முயற்சி செய்கிறேன்!”
“இது உண்மையில் என்னுடைய ஜெபங்களில் உதவியாக இருந்திருக்கிறது. இப்பொழுது என்னால் ஒரு மிக நெருங்கிய நண்பனிடம் பேசுவது போல யெகோவாவிடம் பேச முடிகிறது.”
[பக்கம் 10-ன் படங்கள்]
இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை அளிப்பதில் யெகோவா மற்றும் அவருடைய அமைப்பின் ‘அன்பான பாதுகாப்புக்கும் ஆதரவுக்கும்’ அடையாளமாக இந்தப் புகைப்படத்தை (வலதுபுறம்) ஃபிரான்சிலிருந்து இளைஞர்களின் ஒரு தொகுதி அனுப்பிவைத்திருந்தது