இன்றைய இளைஞர் 1990-களின் சவால்களை எதிர்ப்படுதல்
நவம்பர் 1985. “இளைஞரின் பிரச்னைகளை மனதில் கொண்டு உலகளாவிய செயல்திட்டம் ஒன்றை விரிவாக திட்டமிடும் நோக்குடன் ஐக்கிய நாடுகளின் தலைமை காரியாலயத்தில் 103 தேசங்களிலிருந்து வந்த பிரமுகர்கள் கூடினார்கள்.”—ஐ.மா. க்ரானிக்கல்.
ஆறு வருடங்கள் கடந்துவிட்டன. இளைஞரின் பிரச்னைகள் முன்னொரு போதுமிராத அளவில் பெரிதாக இருக்கின்றன. இளைஞரின் சார்பாக சேர்ந்து வேலைசெய்வதற்கு அரசாங்கங்கள் எடுக்கும் நல்ல நோக்கமுள்ள முயற்சிகளை, அரசியல் தத்துவங்களின் மோதல், நிதி பஞ்சம், ஓயாது மாறிக்கொண்டிருக்கும் முந்துரிமைப் பெறும் காரியங்கள் இடையில் வந்து தடுத்துவிடுகின்றன.
அதேவிதமாகவே மதம் நன்மைக்காக பலமுள்ள ஒரு சக்தியாக இருக்க தவறிவிட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் அண்மையில் செய்யப்பட்ட கருத்து வாக்கெடுப்பு, பெரும்பான்மையான இளைஞர், (சுமார் 90 சதவீதம்) கடவுளில் (அல்லது சர்வலோகத்திலுள்ள ஓர் ஆவியில்) நம்பிக்கை வைத்தவர்களாக இருக்கையில், சிறுபான்மையானோரே தங்கள் வாழ்க்கையில் மதத்தை அதிக முக்கியமானதாகக் கருதுவதை வெளிப்படுத்தியது. மேலுமாக கட்டுப்பாடற்ற பாலுறவு நடத்தையை தடைசெய்ய மதம் வெகு குறைவானதையே அல்லது எதையுமே செய்யாதிருக்கிறது.
பின்னர், இளைஞருக்கு ஆலோசனை வழங்கும் மனோதத்துவர்கள், மனித இன வளர்ச்சி ஆய்வாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இது போன்றவர்கள்—இருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளில் சில சரியானவையாகவும் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. ஆனால் அவர்களுடைய ஆலோசனை சரீரப்பிரகாரமான அக்கறைகளின் பேரில் ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன: பருவ வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பொருளாதார இன்னல், எய்ட்ஸ்-ஐ தவிர்ப்பது, போதப் பொருள் துர்ப்பிரயோகத்தினால் சரீர அபாயங்கள். வெகு அபூர்வமாகவே, அவர்களுடைய ஆலோசனைகள் உட்பட்டிருக்கும் அதிமுக்கியமான ஒழுக்க விவாதங்களை நேருக்கு நேர் எதிர்ப்படுகின்றன. “வல்லுநர்கள்” பொதுவாக பிரபலமான உணர்ச்சிகளின் தற்காலத்திய அலையை பின்பற்றுவதில் அல்லது “பாதுகாப்பான பாலுறவு” அல்லது “வேண்டாம் என்று சொல்!” போன்ற கவர்ச்சியான கோஷங்களை திரும்பச் சொல்வதிலேயே திருப்தியடைகிறார்கள்.
பெற்றோர்களைப் பற்றி என்ன? அநேகர் வாழ்க்கையின் வேலையிலேயே முழுவதுமாக ஆழ்ந்துவிடுகின்றனர். என்ன வழிநடத்தலைக் கொடுப்பது என்பதைக் குறித்து உறுதியற்றவர்களாக அல்லது சங்கடமான விஷயங்களை கலந்துபேசுவது குறித்து அசெளகரியமாக உணர்ந்து அநேக பெற்றோர் உணர்ச்சிகளைத் தொடும் விஷயங்கள் எழும்புகையில் அவைகளை தட்டிக்கழித்துவிடுகிறார்கள். அப்படியென்றால் அநேக இளைஞர் உதவிக்காக அனுபவமில்லாத அவர்களுடைய ஒத்த வயதினரிடமாகத் திரும்புவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
இளைஞருக்கு உதவியின் மிகச் சிறந்த ஊற்றுமூலம்
அப்படியென்றால் இளைஞர் எவ்விதமாக தங்களை குழப்பமடையச்செய்யும் கேள்விகளுக்கு நடைமுறையில் பயனுள்ள பதில்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்? பின்வருவது போன்ற கேள்விகள்: ‘போதை பொருட்களையும் சாராயத்தையும் நான் பயன்படுத்திப் பார்க்கலாமா?’ ‘திருமணத்துக்கு முன்னால் பாலுறவு கொள்வதைப் பற்றியதென்ன?’ ‘அது உண்மையான அன்புதானாவென நான் எப்படி அறிந்து கொள்வது?’
இளைஞருக்கு மிகச் சிறந்த ஆலோசனையின் ஊற்றுமூலம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் என்பதைக் கேட்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். பைபிளா? ஆம் அது இளைஞருக்கு சொல்ல அதிகத்தைக் கொண்டிருக்கிறது. (நீதிமொழிகள் 1–7 அதிகாரங்கள்; எபேசியர் 6:1–3 பார்க்கவும்.) மேலுமாக இது “இளைஞரின் கட்டுக்கடங்காத ஆசைகளை” உன்னிப்பாக அறிந்தவராயிருக்கும் நம்முடைய சிருஷ்டிகரின் ஆவியால் ஏவப்பட்டது. (2 தீமோத்தேயு 2:20–22, பிலிப்ஸ்; 3:16) இந்தப் பண்டைய புத்தகம், 1990-களின் வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்று ஒதுக்கித் தள்ளுவதற்கு முன்பாக இதைச் சிந்தியுங்கள்: இன்றைய “வல்லுநர்கள்” கொடுக்க முன்வரும் பெரும்பாலான ஆலோசனை இப்போதிலிருந்து வெறும் ஒரு 50 ஆண்டுகளுக்குப் பின் வாசிக்கப்பட்டு மதிக்கப்படுமா? என்றபோதிலும் பைபிள், அது எழுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளான பின்னும், தொடர்ந்து உள்ளார்ந்த அக்கறையுடன் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது!
உண்மைதான், பைபிள் காலங்கள் முதற்கொண்டு மனித சமுதாயம் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது, ஆனால் மனித இயல்பு மாறவில்லை. இளமைப் பருவத்துக்குரிய ஆசைகள் இன்னும் அடிப்படையில் அவ்விதமாகவே இருக்கிறது. ஆகவே பைபிள் எப்போதும் நடைமுறைக்கு பயனுள்ளதாகவே இருக்கிறது. இன்று இளைஞர் சம்பந்தப்பட்ட அநேக பிரச்னைகளின் வேருக்கே அது செல்கிறது. அதே சமயம், அது இளைஞருக்கு எதிர்காலத்துக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.
பைபிள் நம்முடைய சிருஷ்டிகரிடமிருந்து வருகிறபடியால், அதன் புத்திமதி பலன்தரத்தக்கதாக நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்பதாக நாம் எதிர்பார்ப்போம். இன்று பைபிளின் ஆலோசனையை பின்பற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இளைஞரின் உண்மை–வாழ்க்கை அனுபவங்கள் அது அவ்வாறு இருப்பதை நிரூபிக்கிறது! இளைஞருக்கு உதவி செய்ய, உவாட்ச் டவர் சொஸயிட்டி இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்றழைக்கப்படும் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இளைஞரின் அக்கறைக்குரிய பல விஷயங்கள் இதில் அடங்கியிருக்கின்றன, அதன் புத்திமதி எப்போதும் பைபிளின் அடிப்படையிலானது! இந்தப் புத்தகத்துக்கு இளம் வாசகரின் உற்சாகமான பிரதிபலிப்பு, பைபிள் அறிவுரைகளின் பயனுக்கு மாத்திரமல்லாமல், இளைஞர் பைபிள் அறிவுரைகளை விரும்புகிறார்கள் அதில் வளமடைகிறார்கள் என்ற உண்மையையும் உறுதிசெய்கிறது. பின்வரும் கட்டுரை உலகம் முழுவதிலுமிருந்து வரும் இளைஞரின் இருதயப்பூர்வமான கருத்துக்கள் சிலவற்றை அளிக்கிறது.
நீங்கள் இளைஞராயிருந்தாலும் அல்லது வயதானவராயிருந்தாலும் சரி, பைபிளை நன்கு அறிந்துகொள்ள நீங்கள் கடமைப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். இலவசமான வீட்டு வேதப்படிப்பு ஏற்பாட்டின் மூலமாக அவ்விதமாகச் செய்வதற்கு இலட்சக்கணக்கானோருக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவியிருக்கின்றனர், உங்களுக்கு உதவ அவர்கள் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். பைபிளின் புத்திமதியோடு நன்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பதன் மூலமும் பொருத்துவதன் மூலமும் இளைஞர் இன்றைய பிரச்னைகளுக்கு நடைமுறையான பரிகாரங்களை மாத்திரமல்லாமல், தம்மை சேவிக்கும்படியாக இளைஞரை அழைக்கும் கடவுளின் தயவை பெற்றுக் கொள்வதற்குரிய வழியையும்கூட கற்றுக்கொள்ளலாம்.—பிரசங்கி 12:1. (g90 9/8)