எமது வாசகரிடமிருந்து
ஒரு போர் கடவுளா? பிப்ரவரி 8, 1994 விழித்தெழு!-வில் உள்ள “பைபிளின் கருத்து . . . யெகோவா ஒரு போர் கடவுளா?” என்ற சிறந்த கட்டுரைக்கு நன்றி. பல ஆண்டுகளாக அநேகர் எழுப்பியிருக்கிற ஒரு கேள்வியாக அது இருக்கிறது. சிலசமயங்களில் ஒரு குடும்பமாக அதை நாங்கள் வழக்கமாக சிந்திப்பதுண்டு. உங்களுடைய கட்டுரை, அதோடுகூட நான் செய்திருக்கிற ஆராய்ச்சி, என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவிசெய்திருக்கிறது.
S. T., ஐக்கிய மாகாணங்கள்
தாய்ப்பாலூட்டுதல் “தாய்ப்பாலுக்குச் சாதகமான அத்தாட்சி” (ஜனவரி 8, 1994) என்ற கட்டுரையை நாங்கள் வாசித்து மகிழ்ந்தோம். என்னுடைய மனைவி தற்பொழுது எங்களுடைய குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டிவருகிறாள். இருப்பினும், தாய்ப்பாலூட்டுதல் சரீரப்பிரகாரமாக தாயினுடைய சக்தியை இழக்கச் செய்கிறது என்ற உண்மையைப்பற்றி அந்தக் கட்டுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை எல்லா பெண்ணும் இரவில் தாய்ப்பாலூட்ட முடியாது. உதாரணமாக, எங்களுடைய விஷயத்தில், என்னுடைய மனைவி மிகக் குறைவான தூக்கத்தையே பெறுவாளாகில், அவளுக்கு அது அதிக கஷ்டமாக இருக்கிறது.
T. K., ஜெர்மனி
உங்களுடைய குறிப்புகளுக்கு நன்றி. இதன் சம்பந்தமாக புதிய தாய்மார்கள் அனுபவிக்கக்கூடிய கஷ்டங்கள் சிலவற்றை முந்திய கட்டுரைகள் கலந்தாராய்ந்திருக்கின்றன. உதாரணமாக, “விழித்தெழு!” செப்டம்பர் 8, 1984 (தமிழ்), மார்ச் 22, 1986 (ஆங்கிலம்) ஆகியவற்றை பாருங்கள்.—ED.
எவ்வளவு தூரம்? “இளைஞர் கேட்கின்றனர் . . . ‘வெகு தூரம்’ என்பது எவ்வளவு தூரம்?” (பிப்ரவரி 8, 1994) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது ஏறக்குறைய ஓராண்டாக நான் ஒரு முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறேன். இதன்பேரில் யெகோவாவின் நோக்குநிலையைக் குறித்து நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். இந்தப் பொருளை எழுதியதற்காக உங்களை நான் மிக அதிகமாகப் போற்றுகிறேன். அது எளிதானதாக இல்லாதபோதிலும்கூட, நான் யெகோவாவின் தராதரங்களுக்கேற்ப வாழ தீர்மானமாய் இருக்கிறேன்.
C. S., ஐக்கிய மாகாணங்கள்
இப்படிப்பட்ட கட்டுரைக்காக நான் சில மாதங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். நான் ஒன்பது மாதங்களாக எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு செய்துவந்திருக்கிறேன். இந்தக் கட்டுரை வந்துசேர்ந்தபோது, நான் என்னுடைய காதலனுக்கு உடனடியாக ஃபோன் செய்தேன். இதுபோன்ற உணர்ச்சியை எளிதில் பாதிக்கக்கூடிய, சிக்கலான விஷயங்களின்பேரில் எங்களுக்கு அறிவுரை வழங்கியதற்காக உங்களுக்கு மிக்க நன்றி.
A. P. G. S., பிரேஸில்
இந்தக் கட்டுரைக்காக நான் உள்ளப்பூர்வமாக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்குத் தேவையான சரியான சமயத்தில் இது பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு 16 வயது, நான் காதலிக்கிற ஒரு பையன் இருக்கிறான். அவனோடு காதல்கொள்வதைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன். வேசித்தனம் தவறு என்பதை நான் அறிந்திருந்தேன் என்பது உண்மைதான், ஆனால் முத்தமிடுவதும் கட்டித்தழுவுவதும் உண்மையில் வெகு தூரம் செல்வதாக இருக்காது என்று நான் நினைத்தேன். ஆனால் இந்தக் கட்டுரையைக்கொண்டு, நான் திருமண வயதை அடையும்வரை, இப்படிப்பட்ட காரியங்கள் எவ்வளவு தூரம் சென்றுக்கொண்டிருக்கின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!
M. H., ஜப்பான்
நான் வாலிபப்பெண் அல்ல, ஆனால் நான் இன்னும் விவாகமாகாதவள், அதே கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். நான் ஒருவருடன் எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பில் ஈடுபட்டுவருகிறேன். ஒரு முழுநேர பிரசங்கியாக, நான் பதிலை அறிந்திருக்கவேண்டும். ஆனால் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக உட்படும்போது, உங்களுடைய நிதானிப்பு உறுதியற்றதாய் ஆகலாம். அந்தக் கட்டுரை மிகவும் காலத்திற்கேற்றதாய் இருந்தது, நான் சந்திப்புசெய்துவருகிற கிறிஸ்தவ மனிதனோடு இந்தப் பொருளைப்பற்றி பேசுவதற்கு அது பெரிதும் உதவிசெய்திருக்கிறது. நாங்கள் அதை மறுபடியும் ஒன்றுசேர்ந்து வாசித்திருக்கிறோம், எல்லாருக்கும் முன்பாக காரியங்களை மதிக்கத்தக்க விதமாக வைத்துக்கொள்ளவும் விரும்புகிறோம்.
M. R., ஐக்கிய மாகாணங்கள்
இந்தப் பொருளைப்பற்றிய விளக்கத்தைப் பெறுவதற்காக நான் ஜெபம் செய்துவந்திருந்தேன். அந்தக் கட்டுரையின் தலைப்பை நான் பார்த்தபோது, என்னுடைய இருதயமே ‘நின்றுவிட்டது.’ அந்தக் கட்டுரையை நான் ஆவலோடு படித்தேன், நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன்.
S. G., இத்தாலி
இரத்தமில்லா மருத்துவ சிகிச்சை “யெகோவாவின் சாட்சிகளும் மருத்துவத் துறையினரும் ஒத்துழைக்கின்றனர்” (மார்ச் 8, 1994) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அதை வாசித்தபோது, என்னுடைய கண்கள் நன்றியுணர்வான கண்ணீரால் நிறைந்திருந்தது. எங்களில் அநேகருக்குத் தெரியாமலிருக்கிற ஒருசில கடின உழைப்பைப்பற்றி அந்தக் கட்டுரை விளக்கிக்கூறியது, ஏனென்றால் நாங்கள் இந்தப் பிரச்னையை ஒருபோதும் அனுபவித்ததில்லை. இரத்த சம்பந்தமான விவாதத்தின்பேரில் விசுவாசப் பரிட்சையை ஒருநாள் எதிர்ப்படுகிற எங்களுக்கு, எங்களுடைய சார்பாக சகோதரர்கள் ஊக்கமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவது அதிக ஆறுதலாக இருக்கிறது.
B. B., ஐக்கிய மாகாணங்கள்