உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 9/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 9/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

மணவிலக்கு “பைபிளின் கருத்து . . . என்ன வகையான மணவிலக்கைக் கடவுள் வெறுக்கிறார்?” (பிப்ரவரி 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரையை வாசித்தபோது, அது என்னை ஆழமாகத் தொட்டது. உண்மையற்ற ஒரு துணையோடு 20 வருடங்கள் மணவாழ்வில் இருந்துவிட்டு சமீபத்தில்தானே ஒரு மணவிலக்கை அனுபவித்திருக்கையில், மணவிலக்கு செய்வதற்கான என்னுடைய தீர்மானத்தை யெகோவா வெறுக்கவில்லை என்றும் நான் குற்ற உணர்வுள்ளவளாக உணர வேண்டாம் என்றும் உணர்ந்தேன். மனச்சோர்வுக்குரிய உணர்ச்சிகள், தனிமை, மற்றும் குற்ற உணர்வு, “எங்கிருந்துமில்லாமல் மேலெழும்பக்கூடும்” என்பது உண்மைதான். ஆனால் காலமும் யெகோவாவின்மேல் சார்ந்திருத்தலுமே குணப்படுத்தும் அம்சங்களாக இருக்கின்றன.

B. M., ஐக்கிய மாகாணங்கள்

என்னுடைய திருமணத்தின்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக நான் இருப்பதற்கு என் கணவன் மிகவும் எதிர்ப்பு தெரிவித்தார். காலப்போக்கில், அவர் தன்னுடைய காதலியுடன் சென்றுவிட்டு, மணவிலக்கிற்காக விண்ணப்பித்தார். கடவுள் ‘என்னை சமாதானமாயிருக்கும்படியே அழைத்தார்’ என்று நான் உண்மையிலேயே உணர்ந்தேன். (1 கொரிந்தியர் 7:15) அந்த முறிவு என்னுடைய பிள்ளைகளுக்குக் குழப்பமூட்டுவதாய் இருந்தது; வருடங்களினூடே நான் பலமுறை மல்கியா 2:16-ஐ வாசித்து நான் சரியான காரியத்தைத்தான் செய்தேனோ என்று யோசித்தேன். இந்த வசனத்தைக் குறித்த சமநிலையான நோக்கைப் பெற்றுக்கொள்ள உங்கள் கட்டுரை எனக்கு உதவியிருக்கிறது.

J. C., ஐக்கிய மாகாணங்கள்

குடிபெயர்தல் குடிபெயர்தல் பற்றிய உங்களுடைய “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளைப் பெற்றுக்கொண்டதற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவளாய் இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியாது. (பிப்ரவரி 22, 1994, மற்றும் மார்ச் 8, 1994, ஆங்கிலம்) எனக்கு 16 வயது; என்னுடைய எல்லா நெருங்கிய நண்பர்களைவிட்டும் வெகு தூரம் செல்லும் தறுவாயில் நான் இருந்தேன். இங்கே இருந்துவிடுவதற்கு ஏதாவது வழி இருக்காதா என்று விரும்பிக்கொண்டு, நான் ஒவ்வொரு இரவும் அழுதுகொண்டிருந்தேன். பின்னர் நான் உங்களுடைய கட்டுரைகளை வாசித்தேன். குடிபெயர்தலின் உடன்பாடான அம்சங்களை அதிகமாக நோக்க ஆரம்பிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். நான் குடிபெயர்ந்து செல்லவேண்டுமென்பது எனக்கு இன்னும் வருத்தகரமானதாக இருந்தாலும், என்னுடைய மனநிலை அதிக முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.

A. D., ஐக்கிய மாகாணங்கள்

சரியாக எனக்குத் தேவையாயிருந்த கட்டுரைகள் அவையே. ஆவிக்குரிய காரியங்களைப் பொறுத்தமட்டில் ஒரே ஒழுங்காய் நடக்கவேண்டுமென்பதே கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த ஆலோசனையாக இருந்தது. நான் எங்கு சென்றாலும் சரி, யெகோவா எப்போதும் அங்கு இருப்பார் என்பதை நான் உணரவேண்டியிருந்தது. ஆகவே ஆழமான தனிப்பட்ட படிப்பின் மூலமாக அவரை நெருங்கிய முறையில் அறிந்துகொள்ள ஏன் முயலக்கூடாது? அவ்வாறு செய்வதே, என்னுடைய புதிய வீட்டில் என்னைக் குடியேற்றுவதில் பெரும் பாகத்தை வகித்தது.

T. T., ஐக்கிய மாகாணங்கள்

படிப்பறிவில்லாமை ஏதாவதொரு அக்கறையூட்டும் கட்டுரையைப் படித்ததும், உங்களுக்கு நன்றி சொல்லி எழுதவேண்டும் என்று நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனால் “படிப்பறிவில்லாமையின் கட்டுகளை முறித்தல்” என்ற தொடர் (பிப்ரவரி 22, 1994, ஆங்கிலம்) முடிவாக என்னை அவ்வாறு செய்யவைத்தது. அடுத்த வாரம், எழுதப் படிக்க தெரியாத ஒரு பெண்ணுடன் நான் பைபிள் படிப்பை ஆரம்பிப்பேன். நான் எப்படி அதைச் செய்வேன் என்று அறியாமல் இருந்தேன்; ஆனால் இப்போது எனக்குத் தெரியும்; அந்தக் கட்டுரைகளுக்காக நன்றி. அவை சரியான நேரத்தில் வந்தன!

M. A. C., இத்தாலி

நகரங்கள் எனக்கு வயது 17; நான் என்னுடைய வாழ்வின் முதல் 14 வருடங்களையும் நியூ யார்க் நகரில் கழித்தேன். ஆகவே பெரிய நகரங்களைப் பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் உண்மையிலேயே அனுபவித்தேன். (ஜனவரி 8, 1994, ஆங்கிலம்) அதிலிருந்த சவாலான வினாவிடைகள் எனக்குப் பிடித்திருந்தன.

S. H., ஐக்கிய மாகாணங்கள்

கஸாவா “நாம் கஸாவா சாப்பிடலாம்!” என்ற கட்டுரை (நவம்பர் 8, 1993, ஆங்கிலம்) மிகவும் அக்கறையூட்டுவதாய் இருந்தது. ஒரு நைஜீரியனாக, கஸாவாவை அதிகமாக அனுபவிக்கும், குறிப்பாக ஃபுஃபு மற்றும் காரியை இஷ்டப்படும் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களில் நானும் ஒருவன். உண்மையில், எங்களுக்கு கஸாவாவைக் கிடைக்கும்படி செய்ததற்காக நம் சிருஷ்டிகருக்கு என்னால் நன்றியை தெரிவிக்க முடியும். அது இல்லையென்றால், லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் அழிந்துவிடுவார்கள்.

O. N. Y. I., நைஜீரியா

தைரியமுள்ள மிஷனரி “தெற்கு ஆசியாவில் வாழ்க்கையின் சவால்களை மேற்கொள்ளுதல்,” என்ற அன்னம்மா ஆப்ரஹாமின் சரிதையில், அவர்களுடைய அனுபவம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. (ஜனவரி 22, 1994, ஆங்கிலம்) அவர்கள் தன் அன்பான கணவனை இழந்துவிட்டார்கள்; ஆனால் தொடர்ந்து உத்தமத்துடன் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை சரிதை எந்தளவுக்கு என்னை உற்சாகப்படுத்தியது என்று நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

I. I. C. S., பிரேஸில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்