எமது வாசகரிடமிருந்து
பயண அசௌக்கியம் எனக்கு வயது பத்து, “உலகை கவனித்தல்” பகுதியில் வந்திருந்த “பயண அசௌக்கியம்” (ஜனவரி 22, 1996) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த ஆலோசனைகளின்படி செய்து பார்த்தேன், அவை பயனுள்ளவையாய் இருந்தன! தயவுசெய்து அப்படிப்பட்ட கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரியுங்கள்.
ஜே. சி. எஸ்., பிரேஸில்
மரண அவதி நான் எழுதுவது, “என் மரண அவதியிலிருந்து மருத்துவர்கள் கற்றுக்கொண்டனர்” (டிசம்பர் 22, 1995) என்ற கட்டுரையைப் பற்றியது. எரித்ரோபொய்டின் ஓர் இரத்தப் புரதமான கருப் புரதத்தின் (albumin) குறைவான சதவீதத்தோடு சமன்படுத்தப்படுவதில்லையா?
ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள்
ஆம், சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு சமன்படுத்தப்படுகிறது. எனவே, சிறிதளவு கருப் புரதம் அடங்கியுள்ள மருந்துகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் தனிப்பட்ட வகையில் தீர்மானிக்க வேண்டும். ஒரு விவரமான கலந்தாலோசிப்புக்கு, தயவுசெய்து “காவற்கோபுரம்” அக்டோபர் 1, 1994; ஆங்கிலத்தில், ஜூன் 1, 1990 ஆகிய இதழ்களில் உள்ள “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைக் காண்க.—ED.
நில நடுக்கம் “ஜப்பானின் சடுதியான பேரழிவு—மக்கள் எப்படி சமாளித்தனர்” (ஆகஸ்ட் 22, 1995) என்ற கட்டுரையை நான் வாசித்தேன். நான் தெரிந்துகொள்ள விரும்புவது, நீங்கள் உங்கள் மீட்புப்பணியை சாட்சிகளுக்கென்று மட்டும் ஏன் வரையறுத்துக்கொண்டீர்கள்? சாட்சிகளாய் இருந்தவர்களுக்கும் சாட்சிகளாய் இராதவர்களுக்கும் ஒரேவிதமாக தங்களுடைய அன்பை சாட்சிகள் காட்டியிருந்திருப்பார்கள் என்றுதான் எவருமே நினைத்திருந்திருப்பார்.
வி. சி. இ., நைஜீரியா
உண்மையில், சாட்சிகளாயிராதவர்களில் பலர் உதவியளிக்கப்பட்டனர். அநேக சமயங்களில், நிவாரணப் பொருட்களை யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளின் மூலமாக அனுப்பிவைப்பதானது, தேவையிலிருப்போருக்கு பொருட்கள் மிக வேகமாய்ப் போய்ச்சேரும் விதமாக நிரூபித்துள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் உணவுப் பொருட்கள் நிரம்பிய இரண்டு வேன்கள் உள்ளூர் அகதி மையம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைப் போன்ற பல உதாரணங்கள் குறிப்பிட்டுக் காட்டப்படலாம். இயல்பாகவே, சாட்சிகள் சபை உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்தனர்; ஏனெனில் பைபிளில் நாம் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறோம்: ‘யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கு, நன்மைசெய்யக்கடவோம்.’ (கலாத்தியர் 6:10)—ED.
விளையாட்டில் போட்டி “விளையாட்டில் போட்டி தவறானதா?” (டிசம்பர் 8, 1995) என்ற உங்கள் கட்டுரையில், கலாத்தியர் 5:26 குறிப்பிடப்பட்டிருந்தது என்னை மிகவும் குழப்பமுறச் செய்தது. கலாத்தியர் புத்தகத்திற்கும், விளையாட்டுக்கள், ஆட்டங்கள் ஆகியவற்றுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? பவுல், மாம்சத்துக்கு எதிராக ஆவியையும் அடிமைத்தனத்துக்கு எதிராக சுயாதீனத்தையும் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார். கிங் ஜேம்ஸ் வர்ஷன் அந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும் . . . இருக்கக்கடவோம்.”
பி. ஓ., ஐக்கிய மாகாணங்கள்
அப்போஸ்தலன் அவ்வார்த்தைகளை எழுதினபோது, விளையாட்டுப் போட்டிகளைக் குறிப்பாக மனதில் கொண்டிருக்கவில்லை என்பது மெய்யே. என்றபோதிலும், சில கிறிஸ்தவர்கள் நியாயமற்ற முறையில் ஒருவரோடொருவர் ஒப்பிட்டுப் பார்த்தனர். இது, ‘பகைகள், விரோதங்கள், பொறாமைகள், கோபங்கள், பிரிவினைகள்’ போன்ற ‘மாம்சப்பிரகாரமான’ மனநிலைகளுக்கு வழிநடத்தின. (கலாத்தியர் 5:20, 21; 6:3, 4, NW) இதன் காரணமாக ‘ஒருவரோடொருவர் போட்டியிடாதபடி’ பவுல் கிறிஸ்தவர்களை எச்சரித்தார். “தி நியூ தேயர்ஸ் கிரீக்-இங்லீஷ் லெக்ஸிகன்”-ன்படி, “போட்டி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, “ஒருவரோடு சண்டையிட அல்லது போராட சவால் விடுப்பது” என்ற அர்த்தமுடையது. இந் நியமம் விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் அல்லது கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் தகாத விதத்தில் போட்டியிடும்படி
செய்யும் எந்த நடவடிக்கைக்கும் நிச்சயமாகவே பொருந்துகிறது.—ED.
வாசிப்பார்வமின்மை “வாசிப்பார்வமின்மைக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்” (ஜனவரி 22, 1996) என்ற கட்டுரையை நான் வாசித்தேன்; அதை அந்தளவுக்கு அனுபவித்ததால் நீங்கள் அளிக்கும் தகவல்நிறைந்த வாசிப்புப் பொருளுக்காக உங்களுக்கு நன்றிதெரிவித்து எழுதும்படியாக தூண்டுவிக்கப்பட்டேன். வாசிப்பு, கடவுளுடைய மதிப்புமிக்க வார்த்தையாகிய பைபிளின் மூலமாக பிரபஞ்சத்தின் படைப்பாளரைப் பற்றி அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இவ்வாறு, ஆவிக்குரிய பலவீனத்திற்கும் வாசிப்பார்வமின்மைக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது.
ஆர். ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
28 ஆண்டுகளாக, நான் முழுக்காட்டப்பட்ட ஒரு கிறிஸ்தவனாகவும், சங்கத்தினுடைய பிரசுரங்களின் ஓர் ஒழுங்கான வாசகனாகவும் இருந்திருக்கிறபோதிலும், வாசிப்பை ஒத்திப்போட்டுக்கொண்டே இருப்பேன். ஆகவே வாசிப்பதற்கான ஆவலை நான் இழந்துவந்ததாய் உணர்ந்தேன். உங்கள் கட்டுரை என் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டியது! இப் பொருளைப் பற்றிய உங்கள் நியாய விவாதம் பிரயோஜனமுண்டாக வாசிக்கும்படியான தூண்டுதலை எனக்கு அளித்தது.
ஏ. ஓ., கனடா