உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/8 பக். 14-15
  • விளையாட்டில் போட்டி தவறானதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விளையாட்டில் போட்டி தவறானதா?
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களின் வரலாறு
  • போட்டி அளவுக்கதிகமாகும்போது
  • ஒரு சமநிலையான நோக்கு
  • போட்டிவிளையாட்டுகளை அவற்றிற்குரிய சரியான இடத்தில் வைத்தல்
    விழித்தெழு!—1992
  • போட்டிவிளையாட்டுகள் வகிக்கும் இடம்
    விழித்தெழு!—1992
  • ஒரு விளையாட்டு அணியில் நான் சேரவேண்டுமா?
    விழித்தெழு!—1996
  • கடவுள்பக்தியும் உடற்பயிற்சியும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/8 பக். 14-15

பைபிளின் கருத்து

விளையாட்டில் போட்டி தவறானதா?

வெதுவெதுப்பான நாள் ஒன்றில், சதுரக்கட்டங்களை உடைய ஓர் ஆட்டத்தை விளையாடிக்கொண்டு, வயதான இரண்டு மனிதர் ஒரு பூங்காவில் உட்கார்ந்திருக்கின்றனர். அருகாமையில் கூச்சலிட்டுக்கொண்டும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டும் இருக்கும் பிள்ளைகளின் சத்தம் கேட்கிறது. சற்றுத் தொலைவில், இளம் வாலிபர் தொகுதி ஒன்று கூடைப் பந்தாட்டத்தை ஆடி மகிழ்கிறது. ஆம், ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி, இளைஞரும் வயதானவர்களும் விளையாட்டுக்களிலும் ஆட்டங்களிலும் இன்பமடைகின்றனர். அவற்றில் பங்கெடுக்கையில், பெரும்பாலானோர் தங்களால் மிகச் சிறந்ததைச் செய்ய கடினமாக விளையாடுகின்றனர். ஒருவேளை நீங்களும் அவ்வாறு செய்துகொண்டிருக்கலாம்.

ஆனால் அப்படிப்பட்ட சிநேகப்பான்மையான போட்டி தவறானது என்று சொல்லப்படலாமா? கிறிஸ்தவர்கள் ‘ஒருவருக்கொருவர் போட்டியைக் கிளப்பிவிடுகிறவர்களாய்’ இருக்கக்கூடாது என்பதாக கலாத்தியர் 5:26-ல் (NW) அப்போஸ்தலன் பவுல் கூறிய புத்திமதியை அநேகர் அறிந்திருக்கிறார்கள். இதைக் கருத்தில் கொள்கையில், பொழுதுபோக்கிற்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களில் போட்டியிடுவது கிறிஸ்தவர்களுக்குத் தகுதியற்றதாக இருக்குமா?

இல்லை என்பதே எளிய பதில். ஏன் அப்படி? அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்குமுன், விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களின் வரலாற்றைச் சுருக்கமாகச் சிந்திப்போம்.

விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களின் வரலாறு

விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களில் பங்கெடுப்பது பண்டையக்காலம் வரையாகச் செல்கிறது; மேலும்—கடவுளுடைய மக்களின் வரலாறு உட்பட—வரலாறு முழுவதும் ஒரு நிலையான அம்சமாக இருக்கிறது. ‘பந்து’ என்ற வார்த்தை பைபிளில்கூட காணப்படுகிறது. ஏசாயா 22:18-ல் (NW), பொல்லாதவர்களுக்கு எதிராக யெகோவா தேவனின் கண்டன அறிவிப்புகளைக் குறிப்பிடுகையில், அது இவ்வாறு சொல்கிறது: “ஒரு பந்தைப் போல், [அவர்களை] இறுக்கமாகச் சுற்றி இழுத்துவிடுவார்.” குழிப்பந்து, தளக்கட்டுப்பந்து போன்ற நவீன பந்துகள் சில, அவற்றை உருவாக்கும் பொருட்களை இறுக்கமாகச் சுற்றி இழுப்பதன்மூலமே இன்னும் உண்டாக்கப்படுகின்றன. கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிள் அதே வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “அவர் உன்னை பந்தைப்போல . . . சுழற்றி எறிந்துவிடுவார்.” இந்த ஒப்புமை பொருத்தமாக இருந்திருக்க வேண்டுமானால், அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்தவர்கள் பந்துகளைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

மேலுமாக, கோத்திரப்பிதாவாகிய யாக்கோபு ஒரு தூதனுடன் மற்போர் செய்துகொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி பைபிளில் இருக்கிறது. யாக்கோபின் பாகத்தில், முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட திறம் கொஞ்சமாவது இருந்திருக்க வேண்டும் என்று இந்தப் பதிவு தெரிவிப்பதாகத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்தப் போராட்டம் மணிக்கணக்கில் நீடித்தும் முடிவுக்கு வராத ஒன்றாக இருந்தது. (ஆதியாகமம் 32:24-26) அக்கறைக்குரியவிதத்தில், சில அறிஞர்கள் சொல்கிறபடி, யாக்கோபு மல்யுத்த நியமங்களை அறிந்திருந்தார் என்பதை இந்தப் பதிவு உணர்த்தக்கூடும். இஸ்ரவேலர்கள் வில்வித்தையிலும்—பயிற்சியையும் திறனையும் தேவைப்படுத்தும் மற்றொரு விளையாட்டு—ஈடுபட்டிருக்க வேண்டும். (1 சாமுவேல் 20:20; புலம்பல் 3:12) பண்டைக்கால மனிதர் பயிற்சிசெய்து, திறமைபெற்று தேர்ந்த மற்றொரு உடற்பயிற்சி சம்பந்தமான விளையாட்டு ஓடுதலாகும்.—2 சாமுவேல் 18:23-27; 1 நாளாகமம் 12:8.

மனதை ஈடுபடுத்திய விளையாட்டுக்களும்—விடுகதைகள் சொல்வதைப் போன்றவை—பிரபலமானவையாகவும் மிகவும் மதிப்பாகக் கருத்தப்பட்டவையாகவும் இருந்ததாகத் தெரிகிறது. இதற்கு மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணம், சிம்சோன் பெலிஸ்தரிடம் விடுகதை சொன்னதாக இருக்கலாம்.—நியாயாதிபதிகள் 14:12-18.

கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில், விளையாட்டுக்களும் ஆட்டங்களும் சிலவேளைகளில் கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறிக்க உருவக வழக்கில் பயன்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக, 1 கொரிந்தியர் 9:24, 25-ல், பவுல் ஒரு விளையாட்டு வீரனின் உறுதியான பயிற்சி திட்டத்தைக் குறிப்பிட்டு, அதை சுயக் கட்டுப்பாடு மற்றும் சகிப்புத்தன்மைக்கான ஒரு கிறிஸ்தவனின் தேவைக்குப் பொருத்துகிறார். மேலும், விளையாட்டுக்கான ஒரு கூறை யெகோவா தம்முடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றில் உள்வைத்திருக்கிறார் என்பது தெளிவாக இருக்கிறது, ஏனென்றால் மனிதனும் மிருகமும் ஆகிய இருதரப்பினரும் விளையாடுவதற்காக நேரத்தை கண்டுபிடிக்கின்றனர்.—யோபு 40:20; சகரியா 8:5; ஒப்பிடுக: எபிரெயர் 12:1.

போட்டி அளவுக்கதிகமாகும்போது

அப்படியானால், ‘ஒருவருக்கொருவர் போட்டியைக் கிளப்பிவிடுகிறவர்களாய்’ இருக்கக்கூடாது என்று அப்போஸ்தலன் பவுல், உடன் கிறிஸ்தவர்களிடம் சொன்னபோது அவர் என்ன சொல்லிக்கொண்டிருந்தார்? (கலாத்தியர் 5:26) அதன் சூழமைவில் பதில் இருக்கிறது. ‘தன் முக்கியத்துவம் நாடுகிறவர்களாய்’ ஆக வேண்டாம் அல்லது, மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகள் சொல்லுகிறபடி, ‘பெருமையுள்ளவர்களாய்,’ ‘போலித் தற்பெருமை உள்ளவர்களாய்,’ ‘வீண் புகழ்ச்சியை விரும்புகிறவர்களாய்’ ஆக வேண்டாம் என்பதை இந்தக் கூற்றுக்கு முன்னுரையாக பவுல் அவர்களிடம் கூறுகிறார். புகழ் மற்றும் மகிமையைப் பின்தொடரும் நாட்டம் பவுலின் நாளில் விளையாட்டு வீரர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தது.

அதிகமதிகமான விளையாட்டு வீரர்கள் வீண்பெருமையுடன் நடந்து, தங்கள்மீதும் தங்கள் திறமைகள்மீதும் கவனத்தை ஈர்க்கும்படி நாடுவதுமான வீண்புகழ்ச்சி நாடும் இன்றைய உலகிலும் அவ்வாறே இருக்கிறது. மற்றவர்களைத் தரக்குறைவாக உணரச்செய்யும் வரையாகச் சிலர் செல்கின்றனர். பழிசுமத்துதல், குற்றஞ்சாட்டுதல், சொற்கள் மூலம் தரக்குறைவாகப் பேசுதல், அல்லது “குறைகூறும் பேச்சு” என்பதாக சில விளையாட்டு வீரர்கள் சொல்லும் பேச்சு ஆகியவை விரைவாக சாதாரணமாகி வருகின்றன. இவை அனைத்தும் ‘போட்டியைக் கிளப்பிவிடுவதாக’ இருந்து, கலாத்தியர் 5:26-ன் கடைசி பாகத்தில் பவுல் குறிப்பிட்ட காரியத்துக்கு—பொறாமைக்கு—வழிநடத்துகின்றன.

மிகவும் மோசமான நிலையில், சமநிலையற்ற போட்டி, சண்டைகளுக்கும், மரணத்துக்கும்கூட வழிநடத்துகிறது. அப்னேரும் யோவாபும் “வாலிபர் முன்வந்து [தங்கள்] முன்பாக விளையாடட்டும்” என்று ஒத்துக்கொண்டபோது, சவுலின் ஆட்களும் தாவீதின் ஆட்களும் கிபியோனில் சந்தித்ததைக் குறித்து சிந்தியுங்கள். (2 சாமுவேல் 2:14-32, டனக்) இது ஒரு வகையான மல்யுத்தப் போட்டியைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. அந்தப் போட்டி என்னவாக இருந்திருந்தாலும் சரி, விரைவில் அது ஒரு பயங்கரமான, குரூரமான போராக மாறியது.

ஒரு சமநிலையான நோக்கு

பொழுதுபோக்கிற்கான விளையாட்டுக்களும் ஆட்டங்களும் புத்துணர்ச்சி அளிப்பவையாய் இருக்கவேண்டும்—சோர்வளிப்பவையாய் அல்ல. கடவுளிடமும் உடன் மானிடர்களிடமும் உள்ள நம்முடைய மதிப்பு, விளையாட்டிலோ ஆட்டங்களிலோ நாம் கொண்டிருக்கும் திறமைகளுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதாக இல்லை என்பதை நினைவில் வைத்திருந்து, காரியங்களை அவற்றிற்குரிய இடத்தில் வைத்துப் பார்ப்பதன்மூலம் இதை நாம் அவ்வாறு ஆக்க முடியும்.

சரீரப் பிரகாரமான அல்லது மனம்சார்ந்த திறமைகளின் காரணமாக, உயர்வு மனப்பான்மை உணர்ச்சிகளை நமக்குள் பொங்கியெழ அனுமதிப்பது முட்டாள்தனமானதாக இருக்கும். ஆகவே, மற்றவர்களில் பொறாமையைத் தூண்டிவிடாதபடிக்கு, நம்மில் கவனத்தை ஈர்க்கும் தகுதியற்ற, உலகப்பிரகாரமான மனச்சாய்வைத் தவிர்ப்போமாக; ஏனென்றால், அன்பு தன்னைப் புகழாது. (1 கொரிந்தியர் 13:4; 1 பேதுரு 2:2) கிளர்ச்சி, ஊக்கமூட்டுதலின் இயல்பான திடீர் வெளிக்காட்டுகள், குழு சகாக்கள் மத்தியில் வாழ்த்து தெரிவிப்புகள் ஆகியவற்றை எதிர்பார்ப்பது நியாயமானதே என்றாலும், இந்த உணர்ச்சிகள் கட்டுப்பாடிழந்து, காட்சிக்குரிய வெளிப்பாடுகளாவதை நாம் விரும்பமாட்டோம்.

விளையாட்டுக்கள் மற்றும் ஆட்டங்களில் மற்றவர்கள் கொண்டிருக்கிற திறமைகளை வைத்து அவர்களுடைய மதிப்பை நாம் ஒருபோதும் எடைபோடமாட்டோம். அதேவிதமாக, திறமை இல்லாமல் இருப்பதால் நம்மைக் குறித்து எவ்விதத்திலும் தாழ்வாக உணரவும் விரும்பமாட்டோம். அப்படியென்றால் ஸ்கோர்களின் பதிவைக் கொண்டிருப்பது தவறு என்று அர்த்தப்படுகிறதா? அவ்வாறு இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் எந்த ஆட்டமும் உண்மையில் எவ்வளவு முக்கியத்துவமற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்—மக்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் எவ்வளவு திறம்பட்டவர்களாகச் செயல்படுகிறார்கள் என்பதைச் சார்ந்ததாக இல்லை. குழுவாக ஆடும் விளையாட்டுக்களில், எந்த ஒரு குழுவும் எப்போதுமே வெற்றி பெறும் ஒன்றாக இல்லாதபடிக்கு, ஒவ்வொரு குழுவிலும் கலந்து ஆடும் ஆட்டக்காரர்களை சில குழுக்கள் ஒழுங்காக மாற்றிவிடுகின்றன.

விளையாட்டுக்களும் ஆட்டங்களும் பைபிளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை மிக அரிதாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றன என்பதையும் கிறிஸ்தவர்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். விளையாட்டுக்களைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதுதானே, எல்லா விளையாட்டுக்களையும் அது முழுமையாய் ஆதரிப்பதாக முடிவுசெய்வது தவறானதாக இருக்கும். (1 கொரிந்தியர் 9:26-ஐ சங்கீதம் 11:5-டன் ஒப்பிடுக.) மேலும், “சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது . . . எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது,” என்றும் பவுல் குறிப்பிட்டார்.—1 தீமோத்தேயு 4:8.

ஆகவே, விளையாட்டுக்களும் ஆட்டங்களும் அவற்றிற்குரிய தகுந்த இடத்தில் மகிழ்ந்து அனுபவிக்கத்தக்கவையாயும் புத்துணர்ச்சி அளிப்பவையாயும் இருக்கின்றன. பைபிள் எல்லா போட்டியையும் கண்டனம் செய்கிறதில்லை; ஆனால் மாயை, பகை, பேராசை, பொறாமை, அல்லது வன்முறையைக் கிளப்பிவிடுகிற போட்டியைக் கண்டனம் செய்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்